அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் மைத்திரிபால சிறிசேன தோற்பார். தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே தேவை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரால் வெற்றிபெற
முடியாது. பெரும்பான்மை மக்கள் அவரை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள 16 சுதந்திரக் கட்சியினரின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற முடியுமாயினும் சிங்கள மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார். எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சரியான தெரிவாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்த செவ்வியின் குறிப்பிட்ட பகுதி வருமாறு
கேள்வி: தற்போது உங்கள் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உங்கள் தரப்பு வேட்பாளர் யார்?
பதில்: அதனை தற்போது கூற முடியாது. இது தொடர்பில் பல்வேறு பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதைப்போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். அவரை தெரிவுசெய்யவே நாங்கள் இப்போது செயற்படுகின்றோம்.
கேள்வி: நீங்கள் ஒரு வேட்பாளரை களமிறக்க நிச்சயமாக கூட்டு எதிரணியுடன் இணையவேண்டும். அப்படியாயின் யதார்த்தமாக பார்த்தால் யார் வேட்பாளராக வருவார்?
பதில் இன்னும் நாங்கள் யாரையும் முடிவு செய்யவில்லை. பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுபவராக அவர் இருக்கவேண்டும்.
கேள்வி: உங்கள் சுதந்திரக்கட்சியில் ஒருசிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் எனக் கூறுகின்றனர்.? இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: அது இதற்குப்பின்னர் ஒரு செல்லுபடியான விடயமாக இருக்காது. தற்போதைய நிலைமையில் அது சாத்தியமற்றதாகவே உள்ளது. கூட்டு எதிரணியும் நாங்களும் இணைந்தே இந்த முடிவு எடுக்கவேண்டும். அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்தால் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் பொதுவாக தற்போது பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கேள்வி: இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: எனக்குப் பிரச்சினை இல்லை. எனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கலாம். ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதை பேசியே தீர்மானிக்கவேண்டும். ஆனால் இங்கு மூன்று விடயங்களை பார்க்கவேண்டும். அதாவது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக்கூடியவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்கவேண்டும்.
கேள்வி: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறமுடியும் அல்லவா?
பதில்: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். ஆனால் சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது. எனவே அது சாத்தியமற்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் மைத்திரிபால சிறிசேன தோற்பார். தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே தேவை.
Reviewed by nafees
on
22:14
Rating:
Reviewed by nafees
on
22:14
Rating:
my3 dont like minorities
ReplyDelete