அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தோற்பார். தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய ஒரு தலை­வரே தேவை.


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் அவரால் வெற்­றி­பெற
முடி­யாது. பெரும்­பான்மை மக்கள் அவரை நிரா­க­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டனர் என்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து  வில­கி­யுள்ள 16 சுதந்­திரக் கட்­சி­யி­னரின் முக்­கி­யஸ்­த­ரான முன்னாள் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற முடி­யு­மா­யினும் சிங்­கள மக்­களின் ஆத­ரவை அவர் இழந்­து­விட்டார். எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது சரி­யான தெரி­வாக அமை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பத்திரிகைக்கு  வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அந்த செவ்­வியின் குறிப்­பிட்ட பகுதி வரு­மாறு

கேள்வி: தற்­போது உங்கள் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன இருக்­கிறார். 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் உங்கள் தரப்பு வேட்­பாளர் யார்?

பதில்: அதனை தற்­போது கூற முடி­யாது. இது தொடர்பில் பல்­வேறு பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தைப்­போன்று தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய ஒரு தலை­வரே எமக்கு தேவைப்­ப­டு­கிறார். அவரை தெரி­வு­செய்­யவே நாங்கள் இப்­போது செயற்­ப­டு­கின்றோம்.

கேள்வி: நீங்கள் ஒரு வேட்­பா­ளரை கள­மி­றக்க நிச்­ச­ய­மாக கூட்டு எதி­ர­ணி­யுடன் இணை­ய­வேண்டும். அப்­ப­டி­யாயின் யதார்த்­த­மாக பார்த்தால் யார் வேட்­பா­ள­ராக வருவார்?

பதில் இன்னும் நாங்கள் யாரையும் முடிவு செய்­ய­வில்லை. பல பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. யாராக இருந்­தாலும் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவைப் பெறு­ப­வ­ராக அவர் இருக்­க­வேண்டும்.

கேள்வி: உங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியில் ஒரு­சிலர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வர­வேண்டும் எனக் கூறு­கின்­றனர்.? இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அது இதற்­குப்­பின்னர் ஒரு செல்­லு­ப­டி­யான விட­ய­மாக இருக்­காது. தற்­போ­தைய நிலை­மையில் அது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது. கூட்டு எதி­ர­ணியும் நாங்­களும் இணைந்தே இந்த முடிவு எடுக்­க­வேண்டும். அவ்­வாறு அனை­வரும் ஒன்­றி­ணைந்து அவரை அழைத்தால் ஓர­ளவு சாத்­தி­ய­மா­கலாம். ஆனால் பொது­வாக தற்­போது பெரும்­பான்மை மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிரா­க­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டனர்.

கேள்வி: இது தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: எனக்குப் பிரச்­சினை இல்லை. எனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து பய­ணிக்­கலாம். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யாரை கள­மி­றக்­கு­வது என்­பதை பேசியே தீர்­மா­னிக்­க­வேண்டும். ஆனால் இங்கு மூன்று விட­யங்­களை பார்க்­க­வேண்டும். அதா­வது சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெறக்­கூ­டி­ய­வ­ராக ஜனா­தி­பதி வேட்­பாளர் இருக்­க­வேண்டும்.

கேள்வி: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறமுடியும் அல்லவா?

பதில்: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். ஆனால் சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது. எனவே அது சாத்தியமற்றது.
அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தோற்பார். தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய ஒரு தலை­வரே தேவை.  அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தோற்பார்.  தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய ஒரு தலை­வரே தேவை. Reviewed by nafees on 22:14 Rating: 5

1 comment:

Powered by Blogger.