கோத்தபாய 2020 இல் ஆட்சிக்கு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் - தமிழ் கூட்டமைப்பும் பாதை போடுகிறது.


பிர­த­ம­ர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு
பிர­த­மரை காப்­பாற்ற முன்­வ­ரு­வ­தா­னது எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான பாதையை அமைப்­ப­தா­கவே அமையும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

அதே­போன்று கூட்­ட­மைப்பு பிர­த­மரை பாது­காத்தால் மறுநாள் நாங்கள் எதிர்­கட்­சி­யா­கி­வி­டுவோம். அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் இருக்­காது.

அந்­த­வ­கையில் இனப்­பி­ரச்­சினை தீர்வுத் திட்­டத்தை அடை­வது சாத்­தி­ய­மற்­றுப்­போய்­விடும். அதற்­கான வழியை கூட்­ட­மைப்பே தேடிக்­கொள்­ளக்­கூ­டாது என்றும் சுதந்­தி­ரக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்­பான அர­சியல் கட்­சி­களின் ராஜ­தந்­திர நகர்­வுகள் தீவி­ர­மாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாம் தேசிய அர­சாங்­கத்தை பாது­காக்­கவே முயற்­சிக்­கின்றோம். அத­னூ­டாக மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டத்தை அடைய முயற்­சிக்­கின்றோம். ஆனால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் கூட்­ட­மைப்பு பிர­த­மரை காப்­பாற்­று­மாக இருந்தால் பாரா­ளு­மன்றம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை இழக்கும்.


 அதன்­பின்னர் சுதந்­தி­ரக்­கட்சி எதிர்க்­கட்­சிக்கு சென்­று­விடும். தொடர்ந்து ஐ.தே.க.வும் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும் ஆட்­சியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண முடி­யாது மாறாக எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான பாதை அமைக்­கப்­படும்.


எனவே கூட்­ட­மைப்பு பிர­த­ம­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்னர் இந்த விடயத்தை மனதில் கொள்­ள­வேண்டும். பிர­தமர் ரணில் தற்­போது எங்கு சென்­றாலும் தனக்கு கூட்­ட­மைப்பின் 16 பேரின் ஆத­ரவு இருப்­ப­தா­கவே கோரி­வ­ரு­கின்றார்.

காரணம் இன்று தமிழ் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­பட்டு வரு­வில்லை. மாறாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்­பவே செயற்­பட்டு வரு­கின்­றது. நான் ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்னர் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மற்றும் சுமந்­தி­ர­னுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன்.


 ஆனால் எமக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எவ்வாறெனினும் கோத்தபாயவிற்கான பாதையை கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்க முயற்சிப்பது தெளிவாகின்றது என்றார்.
கோத்தபாய 2020 இல் ஆட்சிக்கு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் - தமிழ் கூட்டமைப்பும் பாதை போடுகிறது. கோத்தபாய 2020 இல் ஆட்சிக்கு வருவதற்கு  ரணில் விக்கிரமசிங்கவும் - தமிழ் கூட்டமைப்பும் பாதை போடுகிறது. Reviewed by nafees on 23:31 Rating: 5

1 comment:

  1. முஸ்லிம்களே சிந்தித்து பாருங்கள் இவர் முழுக்க முழுக்க மஹிந்தவுக்காகவும், கோத்தபாயவுக்காகவும் பேசிக்கொண்டு தமிழ் மந்திரிகள் UNP யோடு சேர்ந்து வாக்களித்தால் 2020ல் கோத்தபாய ஆட்சிக்கு வருவது இலகுவாக்கி விடும் என்று சொல்லுகிறார். இதிலிருந்து தெரிகிறது இவர்கள் சிறுபான்மை இன மக்கள் மீது எந்த வகையான எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள் என்று.தமிழர்கள் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா?, தமிழர்கள் மனிதர்கள் இல்லையா?, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லையா?, வாக்களிக்க கூடாதா?அவர்கள் தீண்டத்தகாதவர்களா?தமிழர்கள் அவர்களுடைய விருப்பப்படி வாக்களித்தால் அதனையே வெறுப்பு அரசியலாக்கி பதவி பிடிக்க துடிக்கும் இவர்கள் முஸ்லிம்களுக்கும் இதே மருந்து தான் தருகிறார்கள் என்பது தெரியாததா? அது தெரிந்துமா இந்த முஸ்லிம்களுக்கான மீடியாக்கள் என்று சொல்லிக்கொண்டு அலையும் இந்த மீடியாக்கள் மிகமோசமான இனவாதிகளை நல்லவர்களாக காட்டிக்கொண்டு அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்த கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. இங்கு ரணில் நல்லவர் என்பது அல்ல ரணிலை துரத்தி விட்டு யாரை கொண்டுவரப்போகிறார்கள் என்பதுதான் நாட்டினதும் முஸ்லிம்களினதும் கவலை.

    ReplyDelete

Powered by Blogger.