கோத்தபாய 2020 இல் ஆட்சிக்கு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் - தமிழ் கூட்டமைப்பும் பாதை போடுகிறது.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு
பிரதமரை காப்பாற்ற முன்வருவதானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கான பாதையை அமைப்பதாகவே அமையும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோன்று கூட்டமைப்பு பிரதமரை பாதுகாத்தால் மறுநாள் நாங்கள் எதிர்கட்சியாகிவிடுவோம். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்காது.
அந்தவகையில் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை அடைவது சாத்தியமற்றுப்போய்விடும். அதற்கான வழியை கூட்டமைப்பே தேடிக்கொள்ளக்கூடாது என்றும் சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான அரசியல் கட்சிகளின் ராஜதந்திர நகர்வுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாம் தேசிய அரசாங்கத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றோம். அதனூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை அடைய முயற்சிக்கின்றோம். ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பிரதமரை காப்பாற்றுமாக இருந்தால் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும்.
அதன்பின்னர் சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சிக்கு சென்றுவிடும். தொடர்ந்து ஐ.தே.க.வும் கூட்டமைப்பும் இணைந்து அமைக்கும் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது மாறாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கான பாதை அமைக்கப்படும்.
எனவே கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னர் இந்த விடயத்தை மனதில் கொள்ளவேண்டும். பிரதமர் ரணில் தற்போது எங்கு சென்றாலும் தனக்கு கூட்டமைப்பின் 16 பேரின் ஆதரவு இருப்பதாகவே கோரிவருகின்றார்.
காரணம் இன்று தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருவில்லை. மாறாக ஐக்கிய தேசியக்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது. நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
ஆனால் எமக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எவ்வாறெனினும் கோத்தபாயவிற்கான பாதையை கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்க முயற்சிப்பது தெளிவாகின்றது என்றார்.
கோத்தபாய 2020 இல் ஆட்சிக்கு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் - தமிழ் கூட்டமைப்பும் பாதை போடுகிறது.
Reviewed by nafees
on
23:31
Rating:
முஸ்லிம்களே சிந்தித்து பாருங்கள் இவர் முழுக்க முழுக்க மஹிந்தவுக்காகவும், கோத்தபாயவுக்காகவும் பேசிக்கொண்டு தமிழ் மந்திரிகள் UNP யோடு சேர்ந்து வாக்களித்தால் 2020ல் கோத்தபாய ஆட்சிக்கு வருவது இலகுவாக்கி விடும் என்று சொல்லுகிறார். இதிலிருந்து தெரிகிறது இவர்கள் சிறுபான்மை இன மக்கள் மீது எந்த வகையான எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள் என்று.தமிழர்கள் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா?, தமிழர்கள் மனிதர்கள் இல்லையா?, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லையா?, வாக்களிக்க கூடாதா?அவர்கள் தீண்டத்தகாதவர்களா?தமிழர்கள் அவர்களுடைய விருப்பப்படி வாக்களித்தால் அதனையே வெறுப்பு அரசியலாக்கி பதவி பிடிக்க துடிக்கும் இவர்கள் முஸ்லிம்களுக்கும் இதே மருந்து தான் தருகிறார்கள் என்பது தெரியாததா? அது தெரிந்துமா இந்த முஸ்லிம்களுக்கான மீடியாக்கள் என்று சொல்லிக்கொண்டு அலையும் இந்த மீடியாக்கள் மிகமோசமான இனவாதிகளை நல்லவர்களாக காட்டிக்கொண்டு அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்த கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. இங்கு ரணில் நல்லவர் என்பது அல்ல ரணிலை துரத்தி விட்டு யாரை கொண்டுவரப்போகிறார்கள் என்பதுதான் நாட்டினதும் முஸ்லிம்களினதும் கவலை.
ReplyDelete