(வீடியோ) YouTube தலைமை அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் . சிலர் காயம். ஒருவர் உயிரிழப்பு.

YouTube தலைமை அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - சான்பிரான்சிஸ்கோ, சாப் புருனோ பகுதியில் அமைந்துள்ள YouTube தலைமை அலுவலகத்தின் மீது இன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனையடுத்து, அந்த பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், குறித்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ) YouTube தலைமை அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் . சிலர் காயம். ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by nafees
on
18:26
Rating:
Reviewed by nafees
on
18:26
Rating:
No comments: