YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நசிம் அக்தாம் என அடையாளம் காணப்பட்டார்.

அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூடியூபின் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட பெண் நசிம் அக்தாம் (Nasim Aghdam) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யூடியூப் இணையத்தளம் தமது காணொளி பதிவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தமது யூடியூப்பில் பதிவிடும் காணொளிகளின் பார்வைகளுக்கு ஏற்ப யூடியூப் நிர்வாகம் வருமானத்தை பகிர்ந்து தருவது இல்லை எனறும் அக்தாம் கருதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கணினியில் இது தொடர்பான பதிவுகளை அவர் வைத்துள்ளார் என்றும் காவல்துறையினரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூடியூபின் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை காயப்படுத்திய நசிம் அக்தாம் மேற்கொண், பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நசிம் அக்தாம் என அடையாளம் காணப்பட்டார்.
Reviewed by nafees
on
10:44
Rating:
Reviewed by nafees
on
10:44
Rating:
No comments: