கண்டி சில்வெஸ்டர் vs வித்தியார்த்த இடையிலான பர்டி நில்லகொட ரக்பி கிண்ணம்... வித்தியார்த்த சாம்பியன் ஆனது.
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்தியார்த்த கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெற்று வரும் பர்டி நில்லகொட மற்றும் பீ.எம். ஐ. பண்டா ஞாபகார்த்த ரக்பி போட்டியில் எடடாவது வருடப் போட்டியில் 60- 15 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி வித்தியார்த்த கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது.
கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள திருத்துவக் கல்லூரியின் றக்பி மைதானத்தில் நேற்று 01 ம திகதி மாலை இப்போட்டி இடம் பெற்றது..
போட்டியின் முதலாம் பகுதி முடிவடையும் போது 15-07 என்ற புள்ளி வித்தியாசத்தில் வித்தியார்த்த கல்லூரி முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாம் பகுதியிலும் திறமையாக விளையாடிய வித்தியார்த்த கல்லூரிபோட்டிய முடிவடையும் போது 60-15 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப் போட்டியில் பிரதர அதிதியாக சிலவெஸ்தர் கல்லூரியின பழைய மாணவரான கயான்கோதாகொட கலந்து கொண்டார்.
கண்டி புனித சில்வெஸ்தர் கல்லூரிக்கு பாரிய சேவையாற்றிய முன்னால் அதிபர் பர்டி நில்லகொடவும், வித்தியார்த்த கல்லூரிக்கு பாரிய சேவையாற்றிய பீ.எம். ஐ பண்டா அவர்களும் ஞாபகார்த்தமாக இப் போட்டி இடம் பெற்று வருகின்றது.
2018 04 01 ஆஸிக்
கண்டி சில்வெஸ்டர் vs வித்தியார்த்த இடையிலான பர்டி நில்லகொட ரக்பி கிண்ணம்... வித்தியார்த்த சாம்பியன் ஆனது.
Reviewed by nafees
on
21:55
Rating:
No comments: