சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து... ஆதரவாக ரஷ்யா. பல முனை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள அப்பாவிகள். sy


சிரியாவின் நெருக்கடியை அடிப்படையாக வைத்து அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு தொடர்புபடுவதற்கு தான் பின்நிற்கப் போவதில்லையென ரஷ்யா அறிவித்துள்ளது.



ரஷ்ய நாட்டுக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனைக் கூறியுள்ளார்.


சிரியா அரசாங்கம் அந்நாட்டு சிவில் மக்கள் மீது விச வாயு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தி அமெரிக்க தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.


அவ்வாறு அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடாத்தினால் அதற்குப் பதில் தாக்குதல் ஒன்றினூடாக அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ரஷ்ய தூதுவர் அறிவித்துள்ளார்


இந்நிலையில், சிரியா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அப்போராட்டத்தில் தானும் இணைந்து கொள்வதாக பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே தெரிவித்துள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட அமைச்சரவை குழுவொன்றையும் பிரதமர் தெரேஷா மே அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவும், பிரான்சும் சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அதற்கு தானும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சிரியா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவும் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து... ஆதரவாக ரஷ்யா. பல முனை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள அப்பாவிகள். sy சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து... ஆதரவாக ரஷ்யா. பல முனை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள அப்பாவிகள். sy Reviewed by nafees on 18:14 Rating: 5

No comments:

Powered by Blogger.