லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்பினரின் (SLMDI ) கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் 3 தடவைகள் எழுந்து செல்ல முயற்சித்த ஜனாதிபதி ..




லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும்
புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார்.

பிற்பகல் 4 மணிக்கு, லண்டன் ஹில்டன் பார்க் ஹோட்டலில் சுமார் 1 மணித்தியாலம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகவும் காரசாரமான முறையில் நடந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்படும் அநீதிகள், அவற்றுக்கு இதுவரை தீர்வு  காணாமை, இனவாதிகளை கட்டுப்படுத்தாமை,  நீடித்துச் செல்லும் இனவாத நடவடிக்கைள் உள்ளிட்ட பல விடயங்கள் முஸ்லிம் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவிடம் அடுக்கினர்.

15 பேரடங்கிய முஸ்லிம் பிரதிநிதிகளின் கேள்விகள் மற்றும்  விளக்கம் கோரல்களினால் ஆத்திரப்பட்ட மைத்திரிபால சிறிசேன 3 தடவைகள் தமது கதிரையிலிருந்து எழுந்து செல்ல முயன்றுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது தான் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மைத்திரிபால, இவற்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களும் பதில் கூற வேண்டுமெனவும் வாதிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து SLMDI தலைவர் நசீர் குறிப்பிடுகையில்,

மைத்திரிபாலவுக்கு எதை எடுத்துக்கூற வேண்டுமோ,  அதை கூறிவிட்டோம். இலங்கை வரலாற்றில் இவரைப் போன்ற ஒரு பொய் மூட்டை ஜனாதிபதியை நாங்கள் சந்திக்கவேயில்லை. 

இவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிட்டும் என்றோ அல்லது உரிமை பெற்று முஸ்லிம்கள் வாழ்வார்கள் என்றோ எங்களுக்கு கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை.

இப்பேச்சுவார்த்தை வெற்றி என்றோ தோல்வி என்றோ நாம் கூறமாட்டோம். சொல்ல வேண்டியதை ஜனாதிபதிக்கு அச்சமின்றி எடுத்துரைத்தோம் என்பதில் திருப்தியடைகிறோம். ஒரு புகைப்படம் கூட ஜனாதிபதியுடன் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கான தேவையும் எமக்கு எழவில்லை. சந்திப்பு எப்படி காரசாரமாக நடந்ததோ அதேபோன்று கொதி நியையிலேயே முடிந்தது எனவும் JAFFNA MUSLIM இணையத்திடம் குறிப்பிட்டார்.
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்பினரின் (SLMDI ) கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் 3 தடவைகள் எழுந்து செல்ல முயற்சித்த ஜனாதிபதி .. லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்பினரின் (SLMDI ) கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் 3 தடவைகள் எழுந்து செல்ல முயற்சித்த ஜனாதிபதி ..  Reviewed by nafees on 21:37 Rating: 5

2 comments:

  1. Dear Mr. Nazeer, our problems are already solved by COSMOS whose members posed for a photo with our President. we are living happily ever after now. any way thanks for your efforts.

    ReplyDelete
  2. Why you could have some photos with President to tell the world that you met him ..
    It is a historical mistake .
    History will tell that...
    All group will be monitored by Sri Lanka..
    Next time you would not be able to meet any Sri Lanka politicians .
    Where is diplomacy?.
    I think such meeting will not have any good out come but it may encourage more hatred among Sinhalese people .
    Wisdom should prevail

    ReplyDelete

Powered by Blogger.