வாகன விபத்தில் செம்மண்ணோடை ஜுனைதீன் வபாத். (பெண் ஒருவரும் பலி) sd


(எச்.எம்.எம்.பர்ஸான்)
தம்புள்ளையில் இருந்து ஓட்டமாவடி நோக்கி லொறியொன்றில் பயணித்த செம்மண்ணோடையைச் சேர்ந்த ஜுனைதீன்
(ஓட்டமாவடி பசார் வியாபாரி)  என்பவர் வெலிகந்தை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறியில் மோதியதில் பாரிய விபத்தொன்று இன்று (14) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இடத்தில் யானை குறுக்கறுப்பதைக் கண்ட சிறியரக வாகனத்தில் பயணித்தவர்கள் யானை செல்லும் வரை வாகனத்தை நிறுத்தியுள்ளனர் எனவே ஓட்டமாவடியை நோக்கி ஜுனைதீன் என்பவர் பயனித்த லொறி அவ் வாகனத்தி மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தி இருந்த பெண் ஒருவரும் சம்பவ இடத்தில் மரணமடைந்திருப்பதொடு பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த ஜுனைதீனுடைய ஜனாஸா தற்போது வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் செம்மண்ணோடை ஜுனைதீன் வபாத். (பெண் ஒருவரும் பலி) sd வாகன விபத்தில் செம்மண்ணோடை ஜுனைதீன் வபாத். (பெண் ஒருவரும் பலி) sd Reviewed by nafees on 20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.