அக்குரனை பிரதேச சபை தலைவராக PMJD இஸ்திகார் தெரிவு , உப தலைவராக பொதுஜன பெரமுன சரத் அமரகோன் ...

அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இம்முறை அக்குரனை பிரதேச சபையில் சுயாதீனமாக ஒட்டக சின்னத்தில் போட்டியிட்ட PMJD இஸ்திகார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன வாக்களித்துள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி முன்னிருத்திய வேட்பாளருக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன வாக்களித்துள்ளன.
வாக்களிப்பில் இரு தலைவர் வேட்பாளர்களுக்கு சமமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாணய சுழற்சியில் PMJD இஸ்திகார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரம் உப தலைவராக பொதுஜன பெரமுன கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர் 14 க்கு 15 என்ற வாக்கு வித்தியாசத்தில் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்குரனை பிரதேச சபை தலைவராக PMJD இஸ்திகார் தெரிவு , உப தலைவராக பொதுஜன பெரமுன சரத் அமரகோன் ...
Reviewed by nafees
on
02:16
Rating:
No comments: