“O/L பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் ஏழை மாணவனுக்கு அநியாயம் செய்ப்பட்டதா.?உண்மையில் நடந்தது என்ன..?


மேற்படி விடயம் தொடர்பில் MSM.நூர்தீன் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டிருந்த
செய்தி பக்கச் சார்பானது மாத்திரமின்றி உண்மைக்கு புறம்பானதுமாகும் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில் இந்த செய்தியை முதலாவதாக வாசித்த போது நானும் ஆத்திரமடைந்தேன். இது உண்மையென்றால் இது போன்ற நிர்வாக அநீதிகளை அனுமதிக்க முடியாது . எனவே, முகநூலில் கருத்தெழுதுவதோடு மர்திரம் நிறுத்திக் கொள்ளாமல் இந்த மாணவனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது.


இது தொடர்பாக மேலும் தகவல்களை உறுதிப்படுத்திற் கொள்வதற்காக இந்த செய்தியை எழுதிய நூர்தீன் என்பவரை நான்தொடர்பு கொண்ட போது எந்தளவுதூரம்ஒருதலைப்பட்சமாக
இது எழுதப்பட்டுள்ளது என்பதும், எந்தளவு தூரம் அடுத்த தரப்பு உண்மைகள் இதில் மறைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது..


ஒரு தகவல் கிடைக்கும் போது அதன் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்துவது அடிப்படை ஊடக தர்மமாகும். அது பொறுப்புள்ள ஒரு ஊடகவியளாளனின் கடமையுமாகும். சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் Msm நூர்தீன்
என்பவர் தனது இந்த அடிப்படை கடமையை செய்யாமலேயே பாரதூரமான இந்த செய்தியினை ஏன் வெளியிட்டிருக்கிறார் என்பது புரியவில்லை.

இந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணி என்ன என ஆராய வேண்டும் என்பதற்காக இன்று (08.04.2018) நான் நூர்தீன் என்பரோடு பேசினேன். அது போலவே பாடசாலையின் உப அதிபர்களோடும் , அதன்நிர்வாகத்தோடு சம்மந்தப்பட்டசிலரிடமும் பேசினேன். அத்தோடுகுறித்த மாணவனோடும் அவனது தாயோடும் உரையாடினேன்.


மாணவன் தரப்பில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மாத்திரம் வைத்து செய்தி வெளியிட்டுள்ள நூர்தீனிடம் “பாடசாலை நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு இது பற்றிய விளக்கத்தை கோரினீர்களா” என்று கேட்டேன்.
“ஆம், உப அதிபர்களோடு

தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ; பேசக் கிடைக்கவில்லை. எனவே,பாடசாலைத்தரப்பின் நியாயங்களை உள்வாங்காமலேயே செய்தியை வெளியிட்டேன்.” என நூர்தீன் தெரிவித்தார்.


பின்னர், குறித்த உப அதிபர் ஒருவர் ஒருவருடன் பேசினேன். “கடந்த 6.4.2018 அன்று கொழும்புக்கு சென்று கொண்டிருந்த போது நூர்தீனிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது,. அதனை மறு நாள் காலையிலேயே கவனித்தேன். அவரோடு அழைப்பை ஏற்படுத்தி பேச நினத்துக்கொண்டிக்கும் போதே நூர்தீன் அந்த செய்தியினை வெளியிட்டு விட்டார். அவ்வாறுவெளியிடப்பட்டதன் பின்னரே நேற்று(07.04.2018) நண்பகல் 12.30 மணியின் பின்னர் தான் அவரோடு பேசினேன்”

மேலும், தவறு நடந்திருக்கிறது


என தாம் யாரிடமும் கூறவில்லை எனவும்‘எது எப்படி இருந்தாலும்மாணவனுடைய கல்விக்காக சகலவழிகளிலும் தமது நிர்வாகம் உதவதயாராகஇருப்பதாகவே’ கூறியதாகவும் தெரிவித்தார்.
மற்ற உப அதிபரோடு பேசிய போது,இன்று (8.4.3018) மாலையிலேயே நூர்தீன் தன்னோடு பேசியதாவும் ,செய்தியினை வெளியிடுவதற்கு முன்னதாக தனக்கு எவ்வித அழைப்பையும் அவர் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.


மேலும் இது போன்ற ஒரு பாரதூரமான செய்தியை வெளியடும்போது ‘பேச முயற்சித்தேன் முடியவில்லை. எனவே செய்தியை வெளியிட்டேன்’ எனக்கூறுவது பொறுப்புள்ள ஒரு நடவடிக்கை கிடையாது என்பதும், இங்கு குற்றம் சாட்டப்படும் அதிபரோடு பேசுவதற்கு ஏன் நூர்தீன் முயற்சிக்கவில்லை என்பதும் சந்தேகங்களை உருவாக்குகின்றது.
ஆக., இந்தளவு பாரதூரமான செய்தியானது சம்மந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்தோடு பொறுப்புடன் பேசி விடயங்களை தெரிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ளாமலுமேயே பூதாகரமாக வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது.


எனவே பாடசாலையின் பக்கமுள்ள உண்மைகளை வெளிப்படுத்தாமல் வெளியிடப்பட்ட இந்த செய்தியின் பின்னால் வேறு நோக்கங்களும் உள்ளனவா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
பாடசாலைத் தரப்பினரோடும் மாணவனின் தரப்பினரோடும் பேசியதன் அடிப்படையில் இதன் பின்னணி பற்றிய பின்வரும் உண்மைகளை அறிய முடிகிறது.


நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரை OL பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலை கிரமமாக சகல மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 244 மாணவர்களுக்காக OL பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பித்திருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 230 மாணவர்கள் உரிய நேரத்தில் அனுமதி அட்டைகளைப் பெற்று பரீட்சை எழுதியிருக்கிறார்கள்.


குறித்த மாணவன் ஆகஸ்ட் மாதம் முதல் பாடசாலை இறுதித் தவணை முடியும் வரையான காலப்பகுதியில் வெறும் 10 நாட்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். அத்தோடு 3ஆம் தவணைப்பரீட்சைக்கும் அவன் சமூகமளிக்கவில்லை. மொத்தத்தில், பாடசாலை நடை பெற்ற 197 நாட்களில் மொத்தமாக 67 நாட்கள் மாத்திரமே (ஜனவரி -16 நாட்கள், பெப்ரவரி- 02 நாட்கள் ,மார்ச்-12 நாட்கள்ஏ, ஏப்ரல்-06 நாட்கள், மே-07 நாட்கள், ஜூன்-03 நாட்கள், ஜூலை- 11 நாட்கள், ஆகஸ்ட்- 00 நாட்கள், செப்டம்பர்- 08 நாட்கள், ஒக்டோபர் - 01 நாள், நவம்பர்- 00 நாட்கள், டிஸம்பர்-01 நாள்) இந்த மாணவன் பாடசாலைக்கு சமூகமளித்திருக்கிறான். மேலும் முதலாம் தவணைப் பரீட்சையில் ஒரு பாடத்திற்கும், முதலாம் தவணைப் பரீட்சையில் ஒரு பாடத்திற்கும் அவர் சமூகமளிக்கவில்லை. ( நான் குறிப்பிட்ட போதுதான் மாணவனுக்கும் தாயக்கும் இந்த விடயம் தெரிய வந்தது.)இதிலிருந்து இந்த மாணவனின் கல்வி மற்றும் பரீட்சை தொடர்பான ஆர்வம் எப்படிஇருந்திருக்கும் என்பதனைப் பொதுப்புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள முடியும்.


இருப்பினும் பாடசாலை நிர்வாகம் தாமாக முன்வந்து இந்த மாணவனுக்காக பரீட்சைக்கு விண்ணப்பித்திருக்கிறது என்பதனை இங்குகவனிக்கு வேண்டும். விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட அந்த மாணவனுக்கும் அது நன்றாகவே தெரியும். ஆக, தனக்குரிய அனுமதி அட்டையும் வந்திருக்கிறது என்பதும் அந்த மாணவனுக்குத் தெரியும். நவம்பர் 22 முதல் அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன என்பதுவும் அந்த மாணவனுக்குத் தெரியும். இருந்தாலும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை அதைப் பெறுவதற்காக அந்த மாணவன்பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. மேலும், இம்மாணவனுக்கான அனுமதி அட்டை கிடைத்த போது அதில் நவம்பர் 22 ஆம் திகதியே உரிய அலுவலக முத்திரை குத்தப்பட்டு அதனை மாணவனுக்வகு வழங்குவதற்காக பாடசாலை தயார்நிலையில் இருந்துள்ளது.


டிசம்பர் 08 ஆம் திகதி என்பது கடந்த ஆண்டு பாடசாலைக்குரிய இறுதி தினமாகும். அன்றைய தினத்தில் நிறைவு செய்யப்பட வேண்டிய ஏராளமான நிர்வாகப்பணிகள் இருந்துள்ளன. ஊதாரணமாக, இலவச பாடப்புத்தகங்களை 1800 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 30000 புத்தகங்களையும் ,1800 மாணவர்களுக்கான இலவசசீருடை வௌச்சர்களையும்அன்றைய தினம் பகிர்ந்தளிக்கவேண்டிய வேண்டிய பாரிய சுமை பாடசாலை நிஇருந்திருக்கிறது. அது போல ஏனைய பல நிர்வாக வேலைகள் நிரம்பிக் கிடந்துள்ளன.


இப்படியான கெடுபிடிகள் நிறைந்த நாளில்தான் இந்த மாணவனின் தாய் அனுமதி அட்டை வாங்குவதற்காக வந்திருக்கிறார். மாணவர்களின் கல்வி விடயங்களுக்கு பொறுப்பான ஆசிரியர் இலவச பாடப்புத்தகங்களை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் பொறுப்பான ஆசிரியர்களிடம் வழங்குவதில் பிஸியாக இருந்திருக்கிறார். எனவே, அந்தத் தாய் இந்த ஆசிரியரிடம் அனுமதி அட்டையினை கேட்ட போது அதிபரின் அலுவலகத்திற்குச் சென்று கோருமாறு அல்லது தான் வரும் வரை காத்திருக்குமாறு கூறியிருக்கிறார்.


இந்தத் தாய் அலுவலகத்திற்குள் வந்த போது இதற்குப் பொறுப்பான ஆசிரியர் வரும் வரை கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கும் படி சொல்லியிருக்கிறார்கள். ( மேலும், பரீட்சைக்கான அனுமதி அட்டையினை மாணவனின் தாயிடம் வழங்க முடியாது என்பதும் அதனை குறித்த மாணவனே கையெழுத்திட்டு நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.) அதன் பின்னர் அந்தத் தாய் அங்கிருந்து சென்றிருக்கின்றார். அதற்குப் பிறகு பரீட்சை ஆரம்பமாகும் வரையில் எவரையும் தொடர்பு கொண்டு அனுமதி அட்டையினைப் பெறுவதற்கான எந்த முயற்சியினையும் அந்த மாணவனோ அல்லது அவரது தாயோ மேற்கொள்ளவில்லை.


நூர்தீனின் செய்தியில் சொல்லப்பட்டிருப்பது போல 'மாணவன் தனியாகச் சென்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி அட்டையினைக் கோரவில்லை. பாடசாலை இறுதித்தினத்திலேயே அந்தத்தாய் சென்றிருக்கிறார். மேலும், ‘3ஆம் தவணைப் பரீட்சை எழுதவில்லை என்பதனால் உமக்கு அனுமதி அட்டை வரவில்லை' என நூர்தீன் எழுதியிருப்பதைப் போல் யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லையென பாடசாலை நிர்வாகம் உறுதியாகக் கூறுகின்றது.


ஆக. ‘அனுமதி அட்டையினை வழங்காமல் அலைக்கழித்தார்கள்’ என்ற செய்தி ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. இது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செய்தியல்ல.


உண்மையில், இறுதித்தினமான அந்தத் தினத்தில் அதனைப் பெற முடியாவிட்டிருந்தாலும்கூட அந்த ஆசிரியரோடு நேரடியாகப் பேசி அந்த மாணவன் அதனை இலகுவாகப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். அவ்வாறு எந்த முயற்சிகளையும் அந்த மாணவனோ அல்லது அவனுடைய தாயோ செய்யவில்லை

ஆக, உரிய நேரத்தில் அனுமதி அட்டையினை பெற முயற்சிக்கவுமில்லை; பாடசாலை இறுதித்தனத்திலாவது பொறுமையாக இருந்து இதனைப் பெற்றுச் செல்லவுமில்லை; அல்லது அதற்குப் பிறகாவது குறித்த ஆசிரியரிடம் பேசி அதனைப் பெற முயற்சிக்கவுமில்லை.


இந்த மாணவன் ஏன் இப்படி அக்கறையில்லாமல் இருந்தான் என்பதை பின்வரும் விடயங்கள் மூலம்புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது, பாடசாலை நடை பெற்ற 197 நாட்களில் வெறும் 67 நாம்கள் மட்டும் பாடசாலைக்கு இவன் சென்றிருக்கின்றான். 'ஆகஸ்ட் முதல் இறுதித்தவணை முடியும் வரையான காலப்பகுதியில் வெறும் 10 நாட்கள் தவிர அவன் பாடசாலைக்குச் செல்லவில்லை. 3ஆம் தவணைப் பரீட்சை எதிலும் கலந்து கொள்ளவில்லை. எனவே, இந்த மாணவன் OL பரீட்சை எழுதுகின்ற ஆர்வத்துடனோ அல்லது அதற்கான தயார் நிலையிலோ இருக்கவில்லை என்பது புரிகிறது. எனவேதான் ஏனைய மாணவர்களைப் போல அனுமதி அட்டையினை உரிய நேரத்தில் பெறுவதற்கான உரிய முயற்சிகள் எதனையும் செய்யவில்லை என்பது நிரூபனமாகிறது

இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கிறது.
அதாவது உரிய நேரத்தில் அனுமதி அட்டையினைப் பெறாத மாணவர்களுக்குக் கூட பரீட்சை எழுதுவதற்கான அத்தனை உதவிகளையும் பாடசாலை நிர்வாகம் செய்து கொடுத்திருக்கிறது. “உரிய முறையில் உரிய நேரத்தில் நீங்கள் வரவில்லை. எனவே உதவி செய்ய முடியாதென” பாடசாலை நிர்வாகம் தட்டிக்களிக்கவில்லை.


உதாரணமாக ஒரு மாணவன் அனுமதி அட்டை பெறாமலே பரீட்சை மண்டபத்திற்குச் சென்றிருக்கிறான். அங்கிருந்த மேற்பார்வையாளர் ஒருவரினால் இந்த செய்தி பாடசாலை நிர்வாகத்திற்கு
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் எதனையும் செய்ய முடியாதென பாடசாலை நிர்வாகம் கைவிருத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.


பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த அனுமதி அட்டையினை தேடிக் கண்டு பிடித்து அந்த மாணவனின் கையில் ஒப்படைத்து அவன் பரீட்சை எழுதுவதற்கு உதவியிருக்கிறார்கள்.

உண்மை இவ்வாறிருக்க..

“அனுமதி அட்டையைக் கொடுக்காமல் அலைக்களித்தார்கள்;ஏழை மாணவனின் எதிர்காலத்தைபாழாக்கிவிட்டார்கள்” என்று எழுதுவது படு அநியாயமாகும். என்னைப் போன்ற சாதாரணமான ஒருவரினால் சம்மந்தப்பட்டவர்களோடு கதைத்து இந்த உண்மைத்தகவல்களை முடியுமென்றால் ஏன் அந்த சிரேஸ்ட ஊடகவியலாளருக்கு இதனை செய்ய முடியாமல் போனது என்பது புரியவில்லை.


மேலும் இந்த விடயம் தொடர்பில் மாணவனுடைய தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். அதனடிப்படையில் காத்தான்குடிப் பொலிஸார் பாடசாலை அதிபரையும் குறித்த அந்த ஆசிரியரையும் அழைத்து விசாரித்துள்ளார்கள். இதில் திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே மாணவனுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை யென்பதனை பொலிசாரும் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனடிப்படையில் தம்மால் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியாதெனக்கூறி அந்தத் தாய் விரும்பினால் கல்வி அதிகாரிகளிடம் முறையிட முடியும் எனக்கூறி கடிதம் ஒன்றையும் கொடுத்தனுப்பியுள்ளார்கள்.


இந்நிலையிலும் கூட குறித்த மாணவனுக்கு ஏதாவதொரு வகையில் உதவ முடியுமா என பாடசாலை நிர்வாகம் ஆராய்ந்திருக்கிறது.
அம்மாணவன் இவ்வருடம் பரீட்சை எழுத விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.


இதனை குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்று அந்தத் தாயிடமும் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களுடைய கவலையீனங்கள்,அக்கறையீனங்கள் என்பவற்றுக்கு அப்பால் அவனின் கல்விக்காக எவ்வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்ற நேர்மையான அக்கறையின் காரணமாகவே பாடசாலை நிர்வாகம் இதனை செய்திருக்கின்றது.


இதனை “தவறை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது அதன் காரணமாகப் பயந்து அந்த மாணவனின் காலடிக்குச் சென்று விட்டதாகவோ” பலர் அர்த்தம் கற்பிக்க முயற்சிப்பது தெரிகிறது.

நூர்தீனுடைய பேச்சிலும் இது பிரதிபலித்தது.
தவறு விடுகின்ற மாணவர்களுக்கும் கூட வழிகாட்டுவதும் உதவி செய்வதும் பாடசாலையின் கடமையாகும். அதனையே இந்த விடயத்தில் குறித்த இந்தப் பாடசாலை செய்ய முயற்சித்திருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நம் மத்தியில் வளர வேண்டும்.


இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும்
கல்வியில் ஆர்வம் இன்றியும் கவனயீனமாகவும் நடந்து கொண்ட ஒரு மாணவனுடைய குற்றச்சாட்டை ஆதாராமாக கொண்டு படு மோசமாக. பாடசாலை நிர்வாகம் பற்றி எழுதியிருக்கும் ஊடகவியலாளர், உண்மையில் அந்தப் பாடசாலை எதிர் கொள்ளும் பூதாகரமான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக செயற்பட வேண்டும்.


மேலும் கல்வியில் ஆர்வமின்றி பாடசாலை வகுப்புகளையும் பரீட்சைகளையும் புறக்கணிக்கும் ஒரு சில மாணவர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பாடசாலை நிர்வாகத்தை அநியாயமாக போட்டுத்தாக்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களினது கல்விக்கே வேட்டு வைக்கப்படுகிறது என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி
“O/L பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் ஏழை மாணவனுக்கு அநியாயம் செய்ப்பட்டதா.?உண்மையில் நடந்தது என்ன..? “O/L பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் ஏழை மாணவனுக்கு அநியாயம் செய்ப்பட்டதா.?உண்மையில் நடந்தது என்ன..? Reviewed by nafees on 22:09 Rating: 5

2 comments:

  1. but mistake the principal. he have lot of complain

    ReplyDelete
  2. if this boy or his mother serious about O/L exams they could have done a lot more than just sitting at home. also they are not stupid people because they have complained to a reporter about this.

    ReplyDelete

Powered by Blogger.