இம்முறை வெறிச்சோடிய நுவரெலிய! எதிர்பார்த்த சனத்திரள் இல்லை! ne




இம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்முறைகளை அடுத்து, விடுமுறைக்கு செலவு செய்யும் பணத்தை பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கு வழங்குமாறும் அல்லது ஏனைய பகுதிகளில் விடுமுறையை கழிக்குமாறும் முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்கள் இம்முறை பெருமளவில் நுவரெலியா செல்வதை தவிர்த்திருப்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பஸார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நுவரெலியாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் கூட மாற்றிடங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை காணமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.









நன்றி -ஹாபிஸ்

-அல்மசூறா /மடவளை  நியூஸ்
இம்முறை வெறிச்சோடிய நுவரெலிய! எதிர்பார்த்த சனத்திரள் இல்லை! ne இம்முறை வெறிச்சோடிய நுவரெலிய! எதிர்பார்த்த சனத்திரள் இல்லை! ne Reviewed by nafees on 03:02 Rating: 5

No comments:

Powered by Blogger.