Kahatowita Football Club (KFC) அணி ப்ரீமியர் லீக் இன் இரண்டாம் சுற்றுக்கு தெரிவு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டுவரும் சிறந்த அணிகளுக்கிடையேயான
கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரில் கஹட்டோவிட்ட கால்பந்தாட்ட கழகம் கம்பஹா மாவட்ட சுற்றுத்தொடரில் அண்மையில் வெற்றியீட்டிக்கொண்டதை அடுத்து கஹட்டோவிட்ட கால்பந்தாட்ட கழகம் சம்மேளனத்தால் நடாத்தும் இரண்டாது சுற்றுக்கு தெரிவாகி இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
சுமார் 105 கழகங்களில் இருந்து மிகச்சிறந்த 28 அணிகள் இதுவரை இரண்டாவது சுற்றுக்காக தெரிவாகியுள்ளதுடன் இந்த 28 அணிகளில் ஒன்றாக கஹட்டோவிட்ட கால்பந்தாட்ட கழகம் உள்வாங்கப்பட்டு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருப்பது கஹட்டோவிட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நிகழ்வுகளாகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
தொடர்ந்து இடம்பெறவிருக்கும் இரண்டாம் சுற்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை தேடிக்கொடுக்க வேண்டுமென ஊர் சார்பில் வாழ்த்துக்களையயும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்:
லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட
Kahatowita Football Club (KFC) அணி ப்ரீமியர் லீக் இன் இரண்டாம் சுற்றுக்கு தெரிவு
Reviewed by nafees
on
02:16
Rating:
Reviewed by nafees
on
02:16
Rating:
No comments: