தான் வெட்டிய குழிக்குள் தானே விழுந்த நல்லாட்சி. Gv


தேர்தல் ஒன்று நடந்தால் மஹிந்த வந்துவிடுவார் என்ற 
காரணத்துக்காகத்தான்,
உரிய காலத்தில் நடத்தவேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலை இரண்டரை வருடங்கலாக இழுத்தடித்தார்கள் இந்த நல்லாட்சிக்காரர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணங்களில் ஒன்று, விருப்பு வாக்கு முறையினால் கட்சியின் உறுப்பினர்களுக்குள் சண்டைவருகிறது அதனால் புதிய முறையிலான தேர்தலைக் கொண்டுவரப்போகின்றோம் என்பதாகும்.

ஆனால் இன்று அதே புதிய தேர்தல் முறையினால் ஆட்சியமைப்பதற்கு கட்சிகளுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை அன்றாட நிகழ்வாக நாம் கண்டுவருகின்றோம். இன்னும் தேர்தல் முடிந்து மாதங்கள் பல கடந்தாலும் சில உள்ளூராட்சி சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்று தெறியாமல் அல்லல்படும் நிலைமையையும் நாம் கண்டுவருகின்றோம். முன்னய தேர்தல் முறையில் தேர்தலுக்கு முன்தான் உறுப்பினருகளுக்குள் சண்டைகள் நடந்தது, ஆனால்  அந்தச் சண்டைகள்  தேர்தலோடு முடிந்துவிடும். ஆனால் இன்று தேர்தலின் பின்தான் கட்சிகளுக்குள்ளும், உறுப்பினர்களுக்குள்ளும் சண்டைகளே ஆரம்பிக்கின்றன. இந்த விடயங்களைப் பார்க்கும்போது நல்லரசாங்கத்தின் நிலை  குளிக்கப்போய் சேற்றை அள்ளிப்பூசிக் கொண்ட கதையாகவே மாறிவிட்டது எனலாம்.

இந்த புதிய தேர்தல் முறைமூலம்  உறுப்பினர்களின் தொகையை அதிகரித்தார்கள் அதேபோன்று வெட்டுப்புள்ளி முறையையும், வெற்றியடைந்த கட்சிகளுக்கு கொடுக்கும் போனஸ் ஆசனங்களையும் நீக்கினார்கள். இதன் மூலம் அவர்கள் சாதிக்கமுற்பட்ட திட்டம் என்னவென்றால், மஹிந்த அணியினர் வெற்றியடைந்தாலும்  எந்த சபையிலும் அவர்கள்அணி ஆட்சியமைக்க விடக்கூடாது என்பதேயாகும். காரணம்... முன்னய தேர்தல் முறைமூலம் ஒரு கட்சி வெற்றியடைந்தாலும் அவர்கள் இலேசாக ஆட்சியமைப்பதற்கு ஏற்றால்போல்தான் வெட்டுப்புள்ளி என்றவிடயமும், போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டன. இந்த புதிய தேர்தல் முறையில் அதனை நீக்கிவிட்டதன் காரணமாக ஐந்து வீதத்துக்கு குறைவாக வாக்குகளை எடுக்கும் கட்சிகளுக்கும் உறுப்பினர்கள் கொடுக்கப்படும். அதனால் ஒரு உள்ளூராட்சி சபையில்  வெற்றியடைந்த கட்சியின் உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சியினர்தான்  கூடுதலாக இருப்பார்கள். இதனால் கூட்டாட்சியின் மூலம்தான் சபைகளை அமைக்கவேண்டிய இக்கெட்டான நிலைமை தோன்றும்.அதனை தங்களுக்கு சார்பாக பயன்படுத்திகொள்ளவே நல்லாட்சிக்காரர்கள் திட்டம் போட்டிருந்தார்கள். 

ஆளுங்கட்சியில் அங்கம்வகிக்கும் மைத்ரி ரணில் அணியினர், தோல்வியை சந்தித்த உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சியில்  ஒன்றாக இருக்கும் ஆளும்கட்சி அணியினருடன்தான்  சிறிய கட்சியினரும் கூட்டுச்சேர விரும்புவார்கள். அதனைப் பயன்படுத்தி சகல உள்ளூராட்சி மன்றங்களையும் ஆளும்கட்சி என்ற ரீதியில் நாங்கள் கைப்பற்றிவிடுவோம் என்றுதான் அவர்கள் என்னியிருந்தார்கள். அதே நேரம்  மஹிந்த அணியினர் எந்தச் சபையையும் கைப்பற்றமுடியாமல் தோல்வியடைந்து விட்டார்கள் என்று காட்டுவதற்காகத்தான் இந்த புதிய தேர்தல் முறையை கொண்டுவந்தார்கள். அதன் மூலம் மக்களிடம் மஹிந்த செல்வாக்கு இழந்துவிட்டார் என்று காட்டி, எதிர்வரும் தேர்தல்களையும் வெற்றியடைந்து விடலாம் என்றே திட்டம் தீட்டி செயல்பட்டார்கள்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்ததையும் மீறி மஹிந்தவின் மொட்டுக் கட்சி அமோகமாக வெற்றியடைந்ததனால் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் தவுடுபொடியாகி போனது என்பதே உண்மையாகும். இதன் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு கூட்டாட்சிக்குள்ளும் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகிவிட்டது. ஒருவேளை மஹிந்த அணியினர் ஓரளவான வெற்றியைப் பெற்றிருந்தால் இவர்களின் திட்டம் பழித்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறுவிடயமாக இருப்பதனால் மைத்ரியினதும் ரணிலினதும் கோட்டைகள் சரிந்தது மட்டுமல்ல, வாக்குவங்கிகளிலும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தனால் இவர்களுடன் கூட்டுச்சேர்வதற்கு சிறிய கட்சிகளும் ஆர்வம் செலுத்துவதற்கு பின் நிற்கின்றார்கள்.
இந்த நிலையினால் மஹிந்த அணியினரோடு சேர்வதற்கு சிறிய கட்சிகளும் அதேநேரம் ஆளும் கட்சியினரும் சேர்ந்து ஆட்சியமைப்பதையும் நாம் கண்டுவருகின்றோம்.

இப்படியெல்லாம் ஏற்படும் என்று அறிந்திருந்தும் இந்த திட்டத்துக்கு ஆதரவு கொடுத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளும் இன்று ஆட்சியமைப்பதற்கு பலபேர்களின் காலில்விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அவர்கள் அன்று ஆதரவு கொடுத்தது எதற்காக என்றால் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதனாலேயாகும்.  அந்த என்னத்தில் இன்று மண்விழுந்துள்ளது என்பதை இன்று அவர்களே ஒத்துக்கொள்கின்றார்கள்.

இந்த நிலையில்தான் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை பழய முறைப்படி நடத்துங்கள் என்று கேட்குமளவுக்கு அவர்களுடைய நிலை பரிதாபமாக மாறிவிட்டது எனலாம்.  இந்த புதிய தேர்தல் மூலம் பாதிக்கப்பட்டது மஹிந்த அணியினரைவிட நாங்கள்தான் என்று இந்த புதியதேர்தல் முறைக்கு  ஆதரவுதெரிவித்த தமிழ் முஸ்லிம் கட்சிகள் இன்று புலம்பித்தொடங்கி விட்டார்கள்.

ஆகவே தான் வெட்டிய குழியில் தானே விழந்து சாவதைப்போல்தான் இந்த நல்லாட்சியின் தற்போதைய நிலையும் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
தான் வெட்டிய குழிக்குள் தானே விழுந்த நல்லாட்சி. Gv தான் வெட்டிய குழிக்குள் தானே விழுந்த   நல்லாட்சி. Gv Reviewed by nafees on 20:21 Rating: 5

No comments:

Powered by Blogger.