சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டுள்ளது, மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை மிஞ்சியதாக இருக்கக் கூடாது ..



மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை  மிஞ்சியதாக
இருக்கக் கூடாது என்றும் அதே நேரம் அவர்களுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக நாம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்

மேலும் சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டிருப்பதாகவும் அவற்றை உலமாக்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் எமது மார்க்கத்தை பற்றிய தெளிவுகளை மாற்று மதத்தவர்களுக்கு வழங்க தவறிவிட்டதை நினைத்து தௌபா செய்வதுடன் அந்தப் பணியை செய்ய உலமாக்களும் துறை சார்ந்தவர்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு ஒன்று நடை பெற்றது. இச்செயலமர்வில் அனைத்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் தலா பத்து நபர்களும், அரபுக்கல்லூரியின் அதிபர்கள் மற்றும் நிருவாகத் தலைவர்களும் , இன்னும் பல நலன்விரும்பிகளும் உள்ளடங்கலாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களி

அதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரச்சினைகளின் போது தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜம்இய்யா பற்றி வீணாக விமர்சிப்பதை முற்றாகத் தவிர்ந்து ஜம்இய்யா பற்றிய தெளிவுகள் தேவைப்படுபவர்கள் நேரடியக வந்து பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியதுடன் இயக்க வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்படுமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டுள்ளது, மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை மிஞ்சியதாக இருக்கக் கூடாது ..  சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டுள்ளது,  மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை  மிஞ்சியதாக இருக்கக் கூடாது .. Reviewed by nafees on 06:55 Rating: 5

1 comment:

  1. Teach the Masjid Imaams under ACJU, the correct Aqeeda and ask them to spread it in Jummah.

    Let every one knows the Correct Aqeeda followed by Salafus Saliheens with proof from Quran and Hadees. This will protect us from Shirk, Bida and Harram.

    Late to realize but not still too late.

    ReplyDelete

Powered by Blogger.