விகாரைகளை வகைப்படுத்தி அபிவிருத்தி செய்ய புத்தசாசன அமைச்சு நடவடிக்கை



இலங்கையிலுள்ள விகாரைகளை வகைப்படுத்தி அபிவிருத்தி அடையாத விகாரைகளை
அபிவிருத்தி செய்வதற்காக நிதி வழங்குவதற்கு இந்த வருடம் முதல் அரசாங்கத்தின் மூலம் நிதி வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் மாவட்ட செயலகத்தின் மூலம் விகாரை தொடர்பான விபரங்கள் திரட்டப்படும்.அதனடிப்படையில் விகாரைகள் வகைப்படுத்தப்படும்.

ஜனாதிபதி நிதியம், பிரதமர் நிதியம், கல்வியமைச்சிக்கு உட்பட்ட மத்திய கலாச்சார நிதியம், கலாச்சார அமைச்சின் நிதியம், புத்தசாசன அமைச்சிக்குட்பட்ட நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு நிதியமாக அமைக்கப்படும்.

இதன் கீழ் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழுவொன்று நியமிக்கப்படும்.

இந்த குழுவின் சிபாரிசுக்கு அமைவாக விகாரைகள் வகைப்படுத்தப்படும். குறைந்த வருமானத்தை கொண்ட பின் தங்கிய பிரதேசத்திலுள்ள விகாரைகள் தெரிவு செய்யப்பட்டு நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு  உரையாற்றினார்.
விகாரைகளை வகைப்படுத்தி அபிவிருத்தி செய்ய புத்தசாசன அமைச்சு நடவடிக்கை  விகாரைகளை வகைப்படுத்தி அபிவிருத்தி செய்ய புத்தசாசன அமைச்சு நடவடிக்கை Reviewed by nafees on 04:13 Rating: 5

No comments:

Powered by Blogger.