மரணத்தில் சந்தேகம் வைத்து தற்கொலை செய்த இளம் மனைவி. #கெக்கிராவ

கெகிராவை பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கெகிராவை - இஹலகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவர் திருமணத்தின் பின்னர் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் , குறித்த வீட்டிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
தருசி காவிந்யா என்ற குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் அனுராதபுரம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக கெகிராவை காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
மரணத்தில் சந்தேகம் வைத்து தற்கொலை செய்த இளம் மனைவி. #கெக்கிராவ
Reviewed by nafees
on
23:32
Rating:
Reviewed by nafees
on
23:32
Rating:
No comments: