பயணிகளை ஏமாற்றும் கிண்ணியா பஸ் டிப்போ.



-ஹஸ்பர் ஏ ஹலீம் -
கிண்ணியாவில் இருந்து இரவு 10.00 மணிக்கு கொழும்பு நோக்கிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு
சொந்தமான கிண்ணியா பஸ் டிப்போ பஸ் ஆனது வழமையாக கிண்ணியா HNB வங்கிக்கு முன்னால் இருந்தே புறப்படுவது வழக்கம் இருந்தபோதிலும் திடீரென்று கிண்ணியா  திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் புதிய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இனி தொடர்ச்சியாக செல்லும் எனவும் கிண்ணியா டுவிட்டர் சேவை மூலமாக கிண்ணியா பஸ் டிப்போவினால் நேற்று முன்தினம்(16) அறிவிக்கப்பட்டது கிண்ணியா புதிய பஸ் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டும் திறக்கப்படாமை தேடுவாரற்று இரவு நேரங்களிலும் இருளில் மூழ்கடித்து காணப்படுவதுமுண்டு.

ஆனாலும் அறிவித்த தினம் மட்டுமே புதிய பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு பஸ் புறப்பட்டது அதற்கடுத்த மறுநாள் முன்னறிவித்தலின்றி மீண்டும் கிண்ணியா HNB வங்கிக்கு முன்னால் சென்றதால் பயணிகள் ஏமாற்றமடைந்து பலத்த தடுமாற்றங்களுக்கு உள்ளானதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கிண்ணியா பஸ் டிப்போவினால் முன்கூட்டிய முன்னறிவித்தலின்றிய செயற்பாடுகளால் தாங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை காணப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.


எனவே இவ் விடயம் தொடர்பில் உரிய உயரதிகாரிகள் கிண்ணியா இரவு நேர பஸ் சேவையை ஒரே இடத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு அசௌகரியமற்ற பஸ் நிறுத்துமிடத்தை தயார் செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பயணிகளை ஏமாற்றும் கிண்ணியா பஸ் டிப்போ. பயணிகளை ஏமாற்றும் கிண்ணியா பஸ் டிப்போ. Reviewed by nafees on 18:45 Rating: 5

No comments:

Powered by Blogger.