கண்டியில் இடம்பெற்ற சிங்கள் முஸ்லிம் மோதலின் போது உண்மையை விட பொய்யான தகவல்கள் பரப்பட்டது..

கண்டியில் இடம்பெற்ற சிங்கள் முஸ்லிம் மோதலின் போது உண்மையை விட பொய்யான
தகவல்கள் பரப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் வாழ் இலங்கையர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அதேபோல அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வளவு குறைவாக தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.பிழையான தகவல்கள் எவ்வளவு வேகமாக வெளிநாட்டில் வசிப்பவர்களிடயே பரவியுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தின் போது நாம் ஓரிரு மணித்தியாலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.சம்பவம் இடம்பெற்று ஓரிரு மணித்தியாளங்களில் அரசாங்கம் என்ற வகையில் நாம் ஊரடங்கை அமுல்படுத்தினோம், அவசர கால சட்டத்தை அமுல்படுத்தினோம், முப்படைகளை கண்டிக்கு அனுப்பினோம், சமூக வலைகளை முற்றாக முடக்கினோம். சில வெளிநாட்டு தூதுவர்கள் அவர்களின் எல்லையை மீறி பேசினார்கள் .அவற்றை நாம் கண்டுகொள்ளவில்லை. நாட்டை முன்னிறுத்தி நாம் எடுத்த சில தீர்மாணங்களால் நாட்டில் இடம்பெற இருந்த பாரிய ஒரு அழிவு தடுக்கப்பட்டது.
கண்டியில் இடம்பெற்ற சிங்கள் முஸ்லிம் மோதலின் போது உண்மையை விட பொய்யான தகவல்கள் பரப்பட்டது..
Reviewed by nafees
on
08:28
Rating:
ஜனாதிபதி சொல்வது அனைத்தும் உண்மை. அவசரகாலச்சட்டம், ஊரடங்கு சட்டம் எனபவற்றை அமுல்படுத்தி படையினரை பாதுகாப்பிற்கு அனுப்பியது உலகறிந்த உண்மை அந்த வேளையில்தான் முஸ்லிம்களின் கைகளைக் கட்டி பயங்கர மன நிலையில் வைத்து வேலியே பயிரை மேய்ந்த கதையைத் தானே வெளிநாட்டுத் தூதுவர்கள் குற்றஞ் சாட்டினர், அயை தாங்கள் கணக்கெடுக்கவில்லை என்று அவரே ஒத்துக் கொள்கிறாரே. உண்மை பேசும் ஜனாதிபதி எங்களுக்கு கிடைத்துள்ளாரே! ஔமாற்றுகிறார் ஆனால் முடியவில்லை, லண்டனில் நடந்தது தெரியும்தானே. நல்லாட்சியை கொண்டு வந்தவர்களே, இப்பவாவது யூத இலுமினாட்டிகளின் சதியைப் பற்றி சிந்தியுங்க.
ReplyDelete