ஐக்கிய தேசிய கட்சி வாக்களித்து பொதுஜன பெரமுன உறுப்பினர் யட்டினுவர பிரதேச சபை தலைவராக தெரிவு ...



யட்டினுவர பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்டு
ஐக்கிய தேசிய கட்சி வாக்குகளால்  பொதுஜன பெரமுன வேட்பாளர் சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யட்டினுவர பிரதேச சபையில் இம்முறை பொதுஜன பெரமுன வெற்றியீட்டிய போதும் அந்த சபையில் பெரும்பான்மை பலத்தை அக்கட்சியால் நிரூபிக்க முடியாமல் போனது.

இன்றைய கன்னி சபை அமர்வில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் யட்டினுவர பிரதேச சபை தலைவர் முன்னிறுத்த பட்ட அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது .


இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்ட பொதுஜன பெரமுன உறுப்பினர்  நீஷாந்த ரூபஸ்ஸர அதிகப்படியான வாக்குகளால் யட்டினுவர பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
ஐக்கிய தேசிய கட்சி வாக்களித்து பொதுஜன பெரமுன உறுப்பினர் யட்டினுவர பிரதேச சபை தலைவராக தெரிவு ...  ஐக்கிய தேசிய கட்சி வாக்களித்து  பொதுஜன பெரமுன உறுப்பினர் யட்டினுவர பிரதேச சபை தலைவராக தெரிவு ... Reviewed by nafees on 05:14 Rating: 5

No comments:

Powered by Blogger.