தங்கத்தின் மீதான வரி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையையே தரும்.

-எஸ். வினோத்-
நாட்டில் முன்னர் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட போதிலும் அதன் நோக்கம்
சரியான முறையில் நிறைவேற வில்லை. மாறாக அதனால் சட்டவிரோத தங்கக் கடத்தலே அதிகரித்தது. ஆகையால்தான் நாம் இவ்வரியை மீண்டும் நடைமுறைப்படுத்தினோம் இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைபயக்கும் செயலாகும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்லா தெரிவித்தார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தங்க இறக்குமதி வரிகுறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.
தங்க இறக்குமதி மீதான தடையானது நாட்டுக்கு புதிய விடயமல்ல முன்னரும் இந்த வரி முறைமை இலங்கையில் நடைமுறையில் இருந்தது. இந்த வரியானது தங்க ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்குடன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது நீக்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் சரியான முறையில் நிறைவேற வில்லை. மாறாக தங்க இறக்குமதி அதிரித்ததுடன் தங்க கடத்தல் அதிகரித்தது.
அந்த வகையில் இந்த வரி நீக்கப்பட்டதன் பின்னர் ஒரு வருட காலத்திற்கு 650 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்க அறிவித்துள்ளது. இத் தொகையானது எமது நாட்டடை பொறுத்தவரைக்கும் அதிகமானதாகும். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 90 சதவீதமானவை சட்டவிரோதமான முறையில் வெ ளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவுக்கு அதிகளவான தங்கம் கடத்தப்படுகின்றது.
இதனால் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதே போல் வருடம் ஒன்றுக்கு 650 மில்லியன் டொலர் பெறுமதிக்கு தங்கம் இறக்குமதி செய்யும் போது எமது நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும் அது நாட்டின் வெ ளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதிக்கும். இதனால் உள்நாட்டு சந்தையில் பணவீக்கம் ஏற்பட்டு சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கும். இறுதியில் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுவர்.
இறக்குமதி செய்யப்படும் அளவுக்கு ஏற்ப முறையான நுகர்வு மற்றும் சட்டப்படியான ஏற்றுமதி இடம் பெறுமாயின் அது நாட்டுக்குநன்மை பயக்கும் ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை நாம் இறக்குமதி செலவினத்தை மாத்திரமே சுமக்க வேண்டியதுள்ளது.
எனவே தங்க இறக்குமதியை குறைப்பதற்கும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கடப்பாடு இருந்தது. ஆகையால்தான் நாம் இந்த வரியை நடைமுறைப்படுத்தினோம். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மைபயக்கும்.
மேலும் இந்த வரி விதிப்பினால் வெ ளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அனேகமானவர்கள் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும் காரணம் தங்கம் கடத்தும் செயலானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலேயே அதிகம் இடம்பெற்று வருகின்றது
தங்கத்தின் மீதான வரி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையையே தரும்.
Reviewed by nafees
on
02:36
Rating:
Reviewed by nafees
on
02:36
Rating:
No comments: