கிளைமேக்ஸுக்கு வந்துள்ள கட்சி மறுசீரமைப்பு ; தலைவராக ரனில் நீடிப்பார் ? செயலாளராக அகில விராஜ் ?

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 30ம் திகதிக்கு
முன்னர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரனில் விக்ரமசிங்க நீடிப்பார் என கட்சி உட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் கட்சியின் நிறைவேற்று குழு கூடி இணக்கப்பாட்டிற்கு வரும் என கட்சி வட்டாரங்களில் நம்பிக்கை வெளியிடப்படும் அதேவேளை கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பல பின்வரிசை உறுப்பினர்கள் அதிருப்தியும் இருப்பதாக அறிவருகிறது.
தலைவராக ரனில் விக்ரமசிங்க நீடிக்கவுள்ள அதேவேளை கட்சி செயலாளர் பதவி ரனிலின் பேவரிட்களில் ஒருவராக அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்க கடும் முயற்சிகள் தலைமை தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவருக்கு அதிகளவான அதிகாரமும் நிறைவேற்று குழுவிற்கு அதிகளவான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை கட்சியின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்கள் அனைவரையும் தலைவருக்கே தெரிவு செய்யும் அதிகாரம் கட்சி யாப்பால் வழங்கப்பட்டுள்ள அதேவேளை கட்சி நிரைவேற்று குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் ரனில் விக்ரமசிங்கவுக்கு சார்பானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களிலும் ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கட்சிக்கு கடும் எதிர்ப்பு வந்த வேலையில் நிறைவேற்று குழு வாக்கெடுப்பில் ரனில் விக்ரமசிங்க மிக இலகுவாக தலையை காப்பாற்றி கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இம்முறை கட்சி மறுசீரமைப்பு விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்வாங்கப்பட்டுள்ளதால் கட்சிக்கும் பாரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளபோதும் நிறைவேற்று குழு மறுசீரமைப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணியாக இருப்பதால் ரனில் விக்ரமசிங்கவுக்கு தேவையான முறையில் கட்சி மறுசீரமைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சி தலைமையில் மாற்றம் இடம்பெறாவிட்டால் இனியும் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற கருத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளைமேக்ஸுக்கு வந்துள்ள கட்சி மறுசீரமைப்பு ; தலைவராக ரனில் நீடிப்பார் ? செயலாளராக அகில விராஜ் ?
Reviewed by nafees
on
07:52
Rating:
No comments: