திருமண நிகழ்வை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன் மொஹமட் காசிம் நிஸார் இன் மரணம்.

முந்தலம், கீரியங்கள்ளி பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்று ஓடையில் விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
கொழும்பு பகுதியை சேர்ந்த மொஹமட் காசிம் நிஸார் எனும் 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தாயின் சகோதரியுடைய திருமண நிகழ்வில் கலந்துகொள்வதகற்காக கீரியங்கள்ளிக்கு வந்த போதே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கீரியங்கள்ளி - ஆன்டிகம பாதையில் நண்பர்களுடன் துவிச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் அருகில் இருந்த ஓடையில் விழுந்துள்ளது.
ஏனைய சிறுவர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பில் அருகி் உள்ளவர்களிடம் அறிவித்தும் குறித்த சிறுவனை மீட்டு முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே சிறுவன் உயிரிழந்திருந்தான்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண நிகழ்வை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன் மொஹமட் காசிம் நிஸார் இன் மரணம்.
Reviewed by nafees
on
20:41
Rating:
Reviewed by nafees
on
20:41
Rating:
No comments: