கண்டி திகன வன்முறை சம்பவத்தில் முஸ்லிம்களின் வேதனை, கூட்டு எதிர்க் கட்சியினருக்கு கொண்டாட்டம்.

-எம்.எம்.மின்ஹாஜ்-
கண்டி திகன வன்முறை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கூட்டு எதிர்க் கட்சியினர் முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்க்கின்றனர்.
இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பலிக்கடா வாக்க முற்பட்டமை கேவலமான செயற்பாடாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம் பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்று கையில், எனக்கு 24 வருட பாராளுமன்ற அனுபவம் உள்ளது. இதன்படி நான் பல நம்பிக்கையில்லா பிரேரணைகளை பார்த்துள்ளேன்.
எனினும் நம்பிக்கையில்லா பிரே ரணை மீதான விவாதம் ஆரம்பிக் கும்போதே காற்று இறங்கிய நம் பிக்கையில்லா பிரேரணையாகும். லஷ்மன் கதிர்காமர் மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.அது மிகவும் காரசாரமான முறையில் இருந்தது.
என்றாலும் இந்த பிரேரணையின் ஊடாக ஒரு நல்ல
விடயம் நடந்துள்ளது.
அதாவது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த முரண்பாடுகளும் பிளவுகளும் முற்றுப்பெற்றுள்ளன. அது குறித்து நான் மகிழ்ச்சியடை கின்றேன்.
மத்திய வங்கியில் மோசடி நடந்துள்ளது. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப் குழுவில் நானும் உறுப்பி னராகக் இருந்தேன். நான் பிரதமரின் ஆதரவாளன். எனினும் கோப்குழு அறிக்கைக்கு கையொப்பமிட்டேன். அங்கு பிரச்சினையிருப்பதை நாம் ஒத்துக்கொள்கின்றோம். அதற்கு ஒரே தடவையில் பிரதமருக்கு விரல் நீட்ட முடியாது.
அத்துடன் சிறிமாவோ பண்டா நாயக்கவின் ஜே.ஆர். ஜயவர்தன பிரஜாவுரிமையை நீக்கினார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே இவ்வாறு செய்தார். அது போன்றே தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க இறங்க கூடாது என்ப தற்கான சதித்திட்டமே நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.
எவ்வாறாயினும் இந்த நம் பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக அரசாங்கம் மேலும் பலமாகும். நாமும் அதற்கு உதவுவோம்.
அத்துடன் கண்டி திகன சம்பவத்தின் எமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆக்ரோஷ மாக கருத்து தெரிவித்திருந்தார். எனினும் அதனை காரணம் காட்டி எம்மை பலிக்கடாவாக மாற்ற பார்க்கின்றனர்.
இந்த வன்முறை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்க்கின்றனர்.
இதனை அடிப் படையாக கொண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பலிக்கடாவாக்க முற்பட்டமை கேவலமான செயற்பாடாகும்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்தாததால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட தீமை அதிகமானது, அவை சீர்செய்யப்படவேண்டும். இது தொடர்பாக நான் பிரதமருடன் முரண்பட்டுள்ளேன். என்றாலும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.
கண்டி திகன வன்முறை சம்பவத்தில் முஸ்லிம்களின் வேதனை, கூட்டு எதிர்க் கட்சியினருக்கு கொண்டாட்டம்.
Reviewed by nafees
on
22:48
Rating:
Reviewed by nafees
on
22:48
Rating:
ஆளும் அரசாங்கத்துக்கு அப்படியெனில் ஏன் உடனடியாக அந்த பிரச்சினையை தடுக்க முடியாமல் போனது??இவர்கள் எல்லாம் நல்லதோரு சந்தர்ப்பத்தை நாலுக விட்டார்கள் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதிகள் எல்லோரும் சேர்ந்து ரணிலே வீட்டுக்கு அனுப்பியிருந்தால் அது மற்றவர்களுக்குவோரு பாடமாக அமைந்து எச்சரிக்கையாகவும் இருந்து இருக்கும்.
ReplyDelete