பிணத்தை வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் நிலையில் அரசாங்கம்.

நாட்டில் பெருளாதாரம் மரணித்து கிடக்கும் நிலையில் அரசியல் வாதிகள் சூதாட்டத்தில் ஈடுபடுவதான ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
பிணத்தை வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் நிலையிலேயே நாட்டு தற்போது உள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஓரிரு தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெளிவாக அறிவித்துள்ளது.
தாங்கள் 16 பேரும் மேலும் பலருடனே எதிர்தரப்பில் அமருவோம் என்று. அவ்வாறான நிலையில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பிணத்தை வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் நிலையில் அரசாங்கம்.
Reviewed by nafees
on
19:08
Rating:
Reviewed by nafees
on
19:08
Rating:
No comments: