நேற்றிரவு புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு.. பிரபல வியாபாரி உயிரிழப்பு. நால்வர் பலத்த காயம்.

நிட்டம்புவ, அத்தனகல்ல விகாரைக்கு அருகில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மீது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
புத்தாண்டு விளையாட்டுக்களை தொடர்ந்து நேற்று (21) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹெய்யின்துடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பிரபல வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் உட்பட 4 பேரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
நேற்றிரவு புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு.. பிரபல வியாபாரி உயிரிழப்பு. நால்வர் பலத்த காயம்.
Reviewed by nafees
on
22:24
Rating:
Reviewed by nafees
on
22:24
Rating:
No comments: