தென்னகும்புர சம்பவம் தொடர்பில் கண்டி மஸ்ஜித் சம்மேளனம் விளக்கம்..




தற்போது பேசுபொருளாக மாறியுள்ள தென்னகும்புர பள்ளிவாயலில் இடம்பெற்ற சம்பவம் போன்று
இன்னுமொரு சம்பவம் இடம்பெறாத வண்ணம் தங்களுக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிவாயலுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி மஸ்ஜித் சம்மேலன தலைவர் அல் ஹாஜ் கே ஆர் ஏ  சித்தீக் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார். 

சம்பவம் தொடர்பில் தான் அறிந்த கொண்ட உடனேயே இது விடயமாக தென்னகும்புர பள்ளிவாயல் நிர்வாகிகளம் விளக்கம் கோரியதாக கூறிய அவர், நல்லிணக்க நிகழ்வின் அடிப்படையில் இந்த நிகழ்வுக்கு பள்ளி நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும்.அங்கு பிரித் ஓதும் நிகழ்வு எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல்
செய்யப்பட்டுள்ளதாக நிருவாக சபை விளக்கம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்க நிகழ்வு எனும் பெயரில் எந்த வித மார்க்கத்துக்கு முரணான விடயங்களையும் தாங்கள் அனுமதிக்க போவதில்லை என கூறிய அவர் எதிர்காலத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலில் சம்மேளத்தின் அனுமதி இன்றி எந்த ஒரு நல்லிணக்க நிகழ்வையும்  நடத்த தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
தென்னகும்புர சம்பவம் தொடர்பில் கண்டி மஸ்ஜித் சம்மேளனம் விளக்கம்..  தென்னகும்புர சம்பவம் தொடர்பில் கண்டி மஸ்ஜித் சம்மேளனம் விளக்கம்.. Reviewed by nafees on 07:22 Rating: 5

No comments:

Powered by Blogger.