பிரதமருக்கு எதிரான பிரேரணையும்,அதனை எதிர்த்து வாக்களிக்கபோகும் முஸ்லிம் எம்பிக்களின் மறைமுகமான செய்தியும்..!

பிரதமர் ரணில் அவர்களுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு
எதிராக வாக்களிக்க முற்படும் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மறைமுகமாக சமூகத்துக்கு எதைக்கூறவருகின்றார்கள் என்று தெரியுமா?
எதிராக வாக்களிக்க முற்படும் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மறைமுகமாக சமூகத்துக்கு எதைக்கூறவருகின்றார்கள் என்று தெரியுமா?
கண்டி திகன இனவாத கலவரங்களுக்கும், சட்டம் ஒழுங்கு அமைச்சிக்கு பொறுப்பாக இருந்த பிரதமர் ரணில் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சொல்லவருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
ஏனென்றால் பிரதமர் ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணையில் கண்டி திகன கலவரங்களை உரிய நேரத்தில், சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்வசம் வைத்திருந்த பிரதமர் ரணில் அவர்கள் அடக்கத்தவறினார் என்றும் அதனால்தான் பலகோடி சொத்து இழப்புக்கள் ஏற்பட்டதென்ற குற்றச்சாட்டும் அந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி திகன பகுதியில் நடந்த விடயத்துக்கும் பிரதமருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை, அதனால் அப்பாவியான பிரதமரை நாங்கள் காப்பாற்றுவது கடமை என்பதுபோல்தான் அவர்களின் நடவடிக்கை அமையப்போகின்றது என்பதே உண்மையாகும்.
கண்டி திகன சம்பவத்தை உரிய நேரத்தில் அடக்கத்தவறியதற்கு பிரதமர்தான் பதில் கூறவேண்டும் என்று பல அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் கூறிவருகின்ற அதே நேரம் ஆச்சரியப்படவேண்டிய விடயம் என்னவென்றால் ஞானசார தேரர் அவர்களும் இந்த கலவரங்களுக்கு காரணமானவர் ரணில் அவர்கள்தான், அவரைத்தான் முதலில் கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
எது எப்படியிருந்தாலும் கண்டி திகன கலவரங்கள் நடப்பதற்கு முன் பிரதமர் ரணில் அவர்களிடம், நமது அமைச்சர்களும், எம்பிக்களும் அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்புக்கொடுக்குமாறு மன்றாடி கேட்டிருந்தார்கள்.அதனையெல்லாம் நன்றாகவே கேட்டறிந்துகொண்ட பிரதமர் ரணில் அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கதவரியிருந்தார் என்று அமைச்சர் ரிசாத் உட்பட பல உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்கள்.
அது மட்டுமல்ல பிரதமர் ரணில் அவர்களின் கையில்தான் சட்டம் ஒழுங்கு அமைச்சும் இருந்தது, அந்த அமைச்சின் கட்டுப்பாட்டில்தான் பொலிசாரும் அதிரடிப்படையினரும் இருந்தார்கள். அவர்களே வன்முறை நடக்கும் போது வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று மக்கள் கூறி அழுததையும் நாம் கண்டோம். அதற்கு சாட்சியாக சீ.சீ.ரீ கமராக்கள் மூலம் பதியப்பட்ட காட்சிகளையும் நாம் பார்த்தோம். இதற்கெல்லாம் நிச்சயமாக பிரதமர் ரணில் அவர்கள் பதில்சொல்லியே ஆகவேண்டும் அல்லவா?
இந்த நிலையில்தான் கூட்டு எதிர்க்கட்யினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இந்த விடயங்களும் சேர்க்கப்பட்டு, இந்த கலவரத்தை பிரதமர் என்ற வகையில் அவர்தான் பொறுப்புடன் உரிய நேரத்தில் அடக்கியிருக்கவேண்டும். அதனை அவர் செய்யத்தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.அதில் ஆயிரம் உண்மைகள் அடங்கிகிடக்கின்றது என்ற விடயத்தை நமது அரசியல்வாதிகள் அறியாதவர்கள் அல்ல.
இந்த நிலையில் கண்டி திகனையில் நடந்த விடயங்களை உள்ளடைக்கியுள்ள இந்த பிரேரணைக்கு எதிராக நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் வாக்களித்தாலும் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படவேண்டிவரும். இந்த நேரத்தில் மஸ்தான் எம்பி அவர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சொன்ன காரணமே அதற்கு சாட்சியாகும். அவர் கூறியகாரணம் முஸ்லிம் சமூகம் பிரதமர் ரணிலின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதாகும். அவரின் இந்தக் கூற்று இந்த நேரத்தில் சரியானதேயாகும் என்பதே எங்களின் கருத்தாகும். இதே கருத்தை மற்றவர்களும் பின்பற்றதவரினால் அவர்களின் நோக்கமும் பாதையும் வேறானது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும்.
ஆகவே இதனை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கவணத்தில் எடுப்பார்களா? அல்லது இந்த கலவரத்துக்கும் பிரதமர் ரணில் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று அவரைக்காப்பாற்ற போகின்றார்களா? என்பதே எங்களின் கேள்வியாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
பிரதமருக்கு எதிரான பிரேரணையும்,அதனை எதிர்த்து வாக்களிக்கபோகும் முஸ்லிம் எம்பிக்களின் மறைமுகமான செய்தியும்..!
Reviewed by nafees
on
03:54
Rating:
இவரை நம்ம்பிக்கை இல்லாபிறேரனை மூலம் வீட்டு அனுப்பினால் வேறு யாராவது இந்த நாட்டுக்கு பிரதமராக வருவார் இத்தோடு இந்த முசிபத்து இந்த நாட்டில் முடிந்து விடும் .இல்லை என்றால் இதில் இவரை காப்பாற்றினால் இவர் சாகும் வரை இந்த முதுமை நாட்டையும் நமது முஸ்லிம்களையும் ஆட்டிப்படைக்கும்.
ReplyDelete