நேற்றிரவு காணாமல் போனவர் இன்று நீரோடையில் சடலமாக..
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா
மீட்கப்பட்ட சடலம் டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி சிவாநாதன் வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கால்வாயில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
அட்டன் நகரப்பகுதிக்கு நேற்று (12) இரவு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இன்று (13) காலை வரை வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். இதனையடுத்து இவர் இவ்வாறு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு காணாமல் போனவர் இன்று நீரோடையில் சடலமாக..
Reviewed by nafees
on
04:17
Rating:
No comments: