சிலர் பொய்களை பரப்ப முனைவதால் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு தடை - ஜனாதிபதி



ஒரு சிலர் உண்மையை மறைத்து பொய்களை பரப்ப முனைவதனால் தாய்நாட்டின் முன்னேற்றப்
பாதைக்கு முட்டுக் கட்டையாக மாறியுள்ளதென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர் மத்தியில் உரையாற்றிய போது, தாய்நாட்டின் உண்மை நிலவரத்தை சரியாக புரிந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்ப துணைபுரியுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி லண்டன் சென்றுள்ளார். நேற்று புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தபோது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் ஜனாதிபதி குறிப்பிடுகையில்,

நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்து அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை அமுலாக்குகிறது. இந்த வேலைத்திட்டம் பற்றிய சரியான தகவல்கள் மக்களை சென்றடைவதில்லை. சில ஊடகங்கள் குறுகிய அரசியல், வர்த்தக இலாபம் கருதி, உண்மையை மறைத்து பொய்களுக்கு இடமளிக்கின்றன. சகல துறைகளும் அனுபவிக்கும் சுதந்திரம் சரியாக வெளிப்படுத்தப்படுவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் தாய்நாட்டுக்கான பொறுப்புக்களை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் பாடுபட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சக வாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி, நிலைபேறான சமாதானத்தை அடைவது அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாடு எட்டிய முன்னேற்றங்கள் பற்றியும் ஜனாதிபதி புலம்பெயர் இலங்கையர் மத்தியில் கருத்து வெளியிட்டார்.
சிலர் பொய்களை பரப்ப முனைவதால் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு தடை - ஜனாதிபதி சிலர் பொய்களை பரப்ப முனைவதால் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு தடை - ஜனாதிபதி Reviewed by nafees on 03:44 Rating: 5

1 comment:

  1. சிறு பான்மைக்கு உங்கள் ஆட்கள் கடிக்க அடிக்க வாங்கிட்டே பொறுமையாக இருந்தால் நாட்டில் அமைத்துத்தான் இதுதான் உங்களுக்கு தேவை

    ReplyDelete

Powered by Blogger.