கண்டிக் கலவரத்தில் மதஸ்தலங்களை சேதப்படுத்திய இரண்டு இராணுவத்தினர் கைது.

கண்டி - பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர்,
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.

பூஜாபிட்டிய - அம்பத்தென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தளம் ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் தற்போது சேவையில் இருக்கும் இரண்டு இராணுவ உறுப்பிரகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யபட்ட ஒருவர், புத்தளம் சின்னவில்லுவில் அமைந்துள்ள 43ஆவது படைப்பிரிவில் பணியாற்றுவதுடன், மற்றுமொருவர் கெக்கிராவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும், அம்பத்தென்ன கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில்  இருவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டிக் கலவரத்தில் மதஸ்தலங்களை சேதப்படுத்திய இரண்டு இராணுவத்தினர் கைது. கண்டிக் கலவரத்தில் மதஸ்தலங்களை சேதப்படுத்திய இரண்டு இராணுவத்தினர் கைது. Reviewed by nafees on 08:51 Rating: 5

No comments:

Powered by Blogger.