ஆம்புலன்ஸ் வண்டியொன்றை வாங்கும் முயற்சியில் பொலன்னருவை கட்டுவன்வில் சகோதரர்கள்.


வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் வாழும் பொலன்னருவை கட்டுவன்வில் சகோதரர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து தமது ஊர்  கடந்த காலங்களில் இருந்து எதிர் பார்த்து வந்த AMBULANCE வண்டியொன்றை வாங்குவதர்க்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதன் முதல் கட்டமாக கட்டார்,குவைத் ,சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வாழும் சகோதரர்களிடம் தங்களால் முடிந்த தொகையை பெற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகியுள்ளது.

 அல்ஹம்துலில்லாஹ்.இதுவரை தருவதாக பொருந்திய தொகை பனிரண்டு இலட்சங்களை தாண்டிய நிலையில் தொடர்ந்து பணம் சேர்க்கும் விடயத்தில் “கட்டுவன்வில் நற்பணி மன்றம்” மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இன்ஷா அல்லாஹ் இவ்வருட இறுதிக்குள் குறிப்பிட்ட AMBULANCE வண்டியை வாங்குவதர்க்கான முழுத்தொகையும் கிடைத்து விடும்  அத்தோடு இவ்வருடத்துக்குள்ளேயே AMBULANCE வண்டியை வாங்கி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கட்டுவன்வில் ஜும்ஆ பள்ளி வாயலுக்கு கையளிக்கப்படும் என்ற நம்பிக்கையை கட்டுவன்வில் நற்பணி மன்ற தலைவர் முஹம்மது அசனார் கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் இம்முயற்சியை வெற்றி பெற செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போம். 

M.JAWFER.JP

ஆம்புலன்ஸ் வண்டியொன்றை வாங்கும் முயற்சியில் பொலன்னருவை கட்டுவன்வில் சகோதரர்கள். ஆம்புலன்ஸ்  வண்டியொன்றை வாங்கும் முயற்சியில்  பொலன்னருவை கட்டுவன்வில் சகோதரர்கள். Reviewed by nafees on 18:26 Rating: 5

No comments:

Powered by Blogger.