பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன் கடமைக்குத் திரும்ப உத்தரவு..



எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கடமைக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக கல்விசாரா
ஊழியர்களுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினத்திற்குள் கடமைக்குத் திரும்பாத தகுதிகாண சமயா சமய தற்காலிக மாற்று ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட சகலரும் கடமையில் இருந்து நீங்கியதாக கருதப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேபோன்று நிரந்தர ஊழியர்கள் அன்றைய தினத்திற்குள் கடமைக்குத் திரும்பாது தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின அவர்கள் கடமைகளை பகிஷ்கரிக்கும் நாட்களை சம்பளம் இல்லாத காலப்பகுதியாக கருதப் போவதாகவும் உயர்கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல வாரங்களாக கடமைகளை பகிஷ்கரித்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த அரசாங்கம் சம்பள அதிகரிப்பு பற்றிய தீர்மானங்களை எட்டியிருந்தது. இது பற்றி பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் உயர்கல்வி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன் கடமைக்குத் திரும்ப உத்தரவு.. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன் கடமைக்குத் திரும்ப உத்தரவு.. Reviewed by nafees on 19:53 Rating: 5

No comments:

Powered by Blogger.