பூஜாபிட்டிய சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் சிங்கள - முஸ்லிம் இன நல்லுறவு ஒன்றுகூடல்.
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து இன நல்லுரவை
வளர்க்கும் நோக்குடன் பல திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவில் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுரவை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பூஜாபிட்டிய மொரன்கந்த சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் ஒன்று கூடல் ஒன்று இன்று 03 ம் திகதி மாலை இடம் பெற்றது.
பூஜாபிட்டிய பிரதேச செயலகம் பொலீஸ் நிலையம் உற்பட அரச தாபனங்கள் ஏற்பாடு செய்த இவ் ஒன்று கூதலில் பூஜாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பௌத்த தேரர்கள் அக்குறணை ஜம்மியதுல் உலமா சபையின் உறுப்பினர்கள் மவ்லவி மார்கள் மஸ்ஜிதுகளின் நிர்வாகிக்ள் உற்பட பலர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவில் அன்மையில் ஏற்பட்ட அசாதாரன சூழ் நிலை இதன் பின் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு குழுவை நியமிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
2018 04 03 ஆஸிக்
பூஜாபிட்டிய சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் சிங்கள - முஸ்லிம் இன நல்லுறவு ஒன்றுகூடல்.
Reviewed by nafees
on
09:41
Rating:
No comments: