நுவெரலியா புறக்கணிப்பு முட்டாள்தனமான செயலா? அறிவுபூர்வமான செயலா?
நுவரெலிய சனத்தொகை
சிங்களவர்கள் சனத்தொகை 282,053
முஸ்லிம்கள்,தமிழர்கள் 427,762
இன்று அனைத்து தரப்பிலும் நுவரெலியா செல்ல வேண்டாம்.
நுவரெலியாவை புறக்கணியுங்கள்.
அவர்களுக்கு பொருளாதாரரீதியாக பதிலடிகொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரம் எல்லா தளங்களிலும் பரப்பபட்டு வருகிறது.
உண்மையில் இது ஒரு புத்திசாலித்தமான முன்னெடுப்பா?
உண்மையில் இந்த முன்னெடுப்பு எமது எதிரிகளை பலிவாங்குவதாக அமையுமா?
ஏன்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
நாம் அனைவரும் திகன சொந்தங்களுக்கு உதவ வேண்டுமென்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
அதற்காக இப்படியான அறிவுபூர்வமற்ற பிரச்சாரத்தை கொண்டு செல்வது நம்தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வதற்கு சமன்.
மேலே உத்தியோகபூர்வ சனத்தொகையின் படி
சிங்களவர்கள் நுவரெலியாவில் 39 வீதத்தினர்
மீதி 61 வீதத்தினர் முஸ்லிம்களும் தமிழர்களும்.
நுவெரலிய டவுனில் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் ஹோட்டல்களும் இருக்கின்றன.
மிலானோ ஹோட்டல்உட்பட.
நுவரெலியா மஸ்ஜிதுக்கு பாரியதொரு வருமானமும் April சீசனால் கிடைக்கின்றது.
மேலும் உத்தியோகபூர்வ சனத்தொகை மதிப்பீட்டில் முஸ்லிம்களும் தமிழர்களும் குறைத்தே காட்டப்படுகின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நுவரெலியா சிங்களவர்களை பொறுத்தவரை விவசாயம் செய்பவர்களே அதிகம்.
வியாபாரம் என்று வரும் போது அங்கு முஸ்லிம்களின் பங்கு அதிகம்.
இந்த புறக்கணிப்பால் சிங்களவர்களைவிட அதிகம் பாதிப்பு உள்ளாகப் போபவர்கள் தமிழர்கள் தான்.
சிங்களவர்கள் அல்ல.
அது மட்டுமல்ல எங்களை தாக்க வந்தவர்கள் தெற்கின் துவேச சிங்களவர்கள். கைதுசெய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தெற்கை சேர்ந்தவர்கள்.
ஒரு சில இனவாதிகளின் செயல்களுக்கு நாம் இன்னொரு பகுதிசாரரை பலி வாங்குவது சரியல்ல.
அப்படியே புறக்கணிப்பு நடாத்துவதாக இருந்தால் தெற்கை மையப்படுத்தி அதனை செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
இந்த ஏப்ரலில் நடக்கப் போகும் வியாபாரத்தை, வருமானத்தை வைத்து தான் பலர் இந்த முழு வருடத்தையும் ஓட்ட இருக்கிறார்கள்.
அவர்களில் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட வேண்டாம்.
நுவரெலியா புறக்கணிப்பு என்ற பெயரில்.
பெரும்பாலும் முஸ்லிம்கள் நுவரெலியா சென்றால் முஸ்லிம் வீடுகளில் தங்குபவர்களே அதிகம். நுவரெலியாவின் சில முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்காகவே தமது வீடுகளை வாடகைக்கு கொடுக்க தயாராக்கி வைத்திருப்பார்கள்.
இன்னும் 100% முஸ்லிம்கள்
பெரும்பாலும் முஸ்லிம் ஹோட்டல்களிலும்
முஸ்லிம் வீடுகளில் தயாரித்த உணவையே உட்கொள்கிறார்கள்.
நுவரெலியா டவுனுக்கு வெளியில் வாழும் பல முஸ்லிம்கள் உணவுப் பார்சல்களை தயாரித்துகொண்டு வந்து டவுனில் விற்பனை செய்கிறார்கள்.
இவ்வாறனவர்கள் முழுமையாக நம்பியிருப்பது முஸ்லிம்களையே.
இவ்வாறான சிறு வியாபாரிகளையும் நமது புறக்கணிப்பு பாதிக்கும் என்பதே எனது அவதானம்.
திகன மக்களுக்கு கட்டாயம் நாம் உதவ வேண்டும்
சுன்னத்தான் உம்ரா பயணத்துக்கு கிழமைக்கு 4 கோடிக்கும் அதிகம் செலவழிக்கறிது இலங்கை முஸ்லிம் சமூகம்.
இதில் பலர் இரண்டாம் தடவை அல்லது அதற்கு மேற்பட்ட தடவை உம்ரா செல்பவர்கள்.
இவ்வாறனவர்கள் யோசிக்கலாம் தமது இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை உம்ராவுக்கு செலவழிக்கும் பணத்தை திகன சொந்தங்களுக்கு செலவழிக்கலாம்.
முதலாம் தடைவ செல்பவர்களும் இப்படி செய்தால் உம்ரா செய்ததனை விட பாரிய நன்மைகள் அல்லாஹ்வின் புறத்தால் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு சகோதரனுக்கு உதவ எழும்பி செல்வது, மஸ்ஜிதுன் நபவியில் 1 மாதம் இஃதிகாப் இருப்பதனை விட சிறந்த அமல் என நபியவர்கள் ஆதாரபூர்மான ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ளார்.
உணர்ச்சிக்கு கட்டுபட்டு திடீர் முடிவுகளை எடுத்து
எமது அழிவை நாமே தேடிக்கொள்ளாமல்
அறிவுபூர்வமாக நிதானமாக சிந்தித்து
சவால்களுக்கு முகம் கொடுப்போம்.
இனாஸ் முகம்மத்
நுவெரலியா புறக்கணிப்பு முட்டாள்தனமான செயலா? அறிவுபூர்வமான செயலா?
Reviewed by nafees
on
23:28
Rating:
Reviewed by nafees
on
23:28
Rating:

அப்படியென்றால் நுவரெலியாவுக்குப் போனால் உம்ரா போன நன்மை கடைக்குமா சும்மா போங்கடா..............ஒவ்வொத்தனுக்கும் ஏங்பாட்டில் உள்ளது கிடைக்கும் ஒரு முறை நுவரெலியா போகவில்லை என்றால் சாகவாபோறீங்க
ReplyDeletepona mattum sirukku senja paavama varum? pongada... nuveraliyavukku pona mattum sakava porom?
Deleten-eliyavil stall poadufavarhal yaar endru ungalukku thriyama... n-eliyavil valamayana viyafaram nadakkum .. indha stall veli nafarhal enbadhu umakku pudhidhaha sollaveuduma..veen virayam aadambaram.. haram enbadhai meendum ninaivoota venduma..indha sandharpathai payan petraal pilai illaye...
ReplyDeleteAwangale wara wendam nu solranga maruwa ezuku niga thala podriga.. brthr yezuku poro summa panatha weenadika thane andha trip pora salliya wetchi illaza wangalukku kudukurazu nallamillaya.. apdiye niga powanum na poga ezuku. Matthawangalda manasa mathura.
ReplyDeleteஒரு அடி முட்டாள்தனமான கட்டுரை.
ReplyDeleteஇனாஸ் தம்பி, சும்ம சின்ன புள்ள தணமா யோசிக்கிரிங்க.
ReplyDeleteநுவரெலிய மட்டுமில்ல இலங்கைல எங்கயும் trip போக வாணம் என்றொம்.
இதுக்கு பல காரணம் ஈகிது ராஜா.
1.குடும்பதோட போகொல்ல காடயர்கள் தாக்கினா நீங்க காப்பாத்த போவிங்கலா?
2.செல பெத்துபோட்டதுவல் சல்லி பின்னுக்கு அலைரதால பொறந்ததுவல் சாராயம் கஞ்சா இதெல்லாம் அடிச்சிட்டு அங்க வார பொம்புலயல்ட பின்னுக்கு சுத்துதுவல். இதால அந்த நாய்வல்ட பேர் கெடாதொ "மத் த்ரவ்வ பாநய கரபு முஸ்லிம் தருனயோ" என்டு முஸ்லிம் பேர்தான் கெடும்.
3.சில அபாய ஹிஜாப் போட்ட வெசம் புடிச்ச கொமருவல் அங்க போடுற ஆட்டத்த பாத்தா நாளக்கே கியாமத்து நாள் வந்துருமோ என்டு பயமா ஈகிது தொர.
இப்பிடி பல காரணம் ஈக்கிது..
இது யார்டயும் பொருளாதாரத்த தாக்க இல்ல எங்கட உம்மத்த காப்பாத்த...
..................................................................
அடுத்தது.... பாதிக்க பட்டவங்ஙகளுக்கு உதவுரது....
பொதுவா எல்லாரும் உதவுராங்க..
நீங்க பாருங்க. எங்க பாவம் அதிகரிக்கிமொ அங்க அல்லாட சோதன வரும்.
ஹதீஸ்ட கருத்து தொழாதவன்ட ஊட்ட பொடியன்மார்ட செல்லி வெரவ் போட்டு பத்த வெக்கணும் என்டு நெனக்கிது நபி (ஸல்) சஎல்லி ஈக்கிராங்க..
ஆகவே நடந்து முடிஞ்சது ஒரு Warning நீங்க நுவரெலியகி ஆல்சேக்ரத உட்டுடு பள்ளிக்கி தொழ ஆல் சேருங்க. நீங்களும் ஒங்கட குடும்பமும் தொழுங்க....
அல்லாஹ் கு சோதிக்க ஏலும் என்டா ஒதவிசெய்யவும் தெரியும்....
உம்ரா போரவங்க போவட்டும் ஒங்களுக்கு தெரிஞ்சவங்க போனா முஸ்லீம்கள்ட ஈமான்கு துஆ செய்ய செல்லுங்க..
ongalukku pohanum pola athukaha maththawangala ilukkathinga, our warusam pohallanda yarukkum ondum koranjidathu
ReplyDelete