முகம்மத் பின் சல்மான் அரண்மனை மீது தாக்குதலா? அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள விளக்கம் இதுதான்.


ரியாத் அரச  அரண்மனையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடப்பதாகவும், இளவரசர் முகம்மத் பின் சல்மான்
அரண்மனை மீது அவரின் கொள்கைக்கு எதிரானவர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் சமூகவலைகளில்   செய்திகள் வெளியாகி வருவது அறிந்ததே..

இந்நிலையில்,  சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மத் பின் சல்மான் அரண்மனை அருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என. மட்டுமே உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகி  உள்ளது .

சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மத் பின் சல்மான்  கலாச்சார மாற்றங்களை  மேற்கொண்டு வருவதால், மத அடிப்படைவாதிகளுக்கும் இவருக்கும் பலத்த கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

மேலும், ஊழல் செய்ததாகக் கூறி தனது சகோதரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களை வீட்டுக்காவலில் வைத்தார்.

இந்நிலையில், ரியாத் நகரில், இளவரசர் முகம்மத் பின் சல்மான் அரண்மனை அருகே துப்பாக்கிச் சத்தமும், அடுத்து சிறிய குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டது.

இதையடுத்து அப்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. தொடர்ந்து, அரண்மனையில் இருந்த இளவரசர் சல்மான், அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த பதுங்கு குழியில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே சவுதி அரண்மனை மேல் ஆளில்லா உளவு விமானம் பறந்தாகவும், அதனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதுவும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முகம்மத் பின் சல்மான் அரண்மனை மீது தாக்குதலா? அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள விளக்கம் இதுதான். முகம்மத் பின் சல்மான் அரண்மனை மீது தாக்குதலா? அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள விளக்கம் இதுதான். Reviewed by nafees on 22:36 Rating: 5

2 comments:

  1. இன்ஷா அல்லாஹ் சவூதியில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்க முடியும்.

    ReplyDelete
  2. In shaa Allah must be change the current king

    ReplyDelete

Powered by Blogger.