பிரேமக்குமாரிகள் ராஜயோகா நிலைய தியான நிகழ்வு.
-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி, கட்டுகாஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள ஜோதி பவான்
கட்டிடத்தில் உள்ள பிரேமக்குமாரிகள் ராஜயோகா நிலையத்தில் இடம் பெற்ற தியான நிகழ்வில் வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆன்மீக செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி நிர்மலா கஜாரியா பிரதம அதிதியாகக் கலந்து ஆன்மீகச் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.
அதில் கண்டி உதவி இந்தியத் தூதுவர் எச்.ஈ. திரேந்திர சிங், கண்டி மாநகரபிதா கேசர சேனாநாயக்கா, மத்திய மாகாண சபை அங்கத்தவர் திருமதி சித்தரா மன்திலக ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன. கனிசமான முஸ்லிம்களும் இதில் பங்குகொண்டனர். மேற்படி நிகழ்வை கண்டி பிரேமக்குமாரிகள் ராஜயோக நிலைய இணைப்பாளர் வேலாயுதம் ஒழுங்கு செய்திருந்தார்.
பிரேமக்குமாரிகள் ராஜயோகா நிலைய தியான நிகழ்வு.
Reviewed by nafees
on
20:15
Rating:
No comments: