ஆறாவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த, கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு .

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட “கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு
– PAQ” ஆறாவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இத்தறுவாயில் முதலில் வல்ல இறைவனுக்கும் மற்றும் இதன் பின்னால் இருந்து தட்டிகொடுத்த அங்கத்தவர்கள் உங்களுக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
இஸ்லாமிய வாழ்க்கை முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய முன்மாதிரி நகராக நமது ஊரை கட்டியெழுப்பும் பணியில் முடியுமான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குதல் எனும் தூய இலட்சியத்தோடு உதயமான “PAQ” அமைப்பிற்கு இத்தனை காலமாக பக்கபலமாக இருந்த அன்பர்களை தனது ஆறாவது வருடாந்த பொதுகூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
இக்கூட்டமைப்பும் மேலும் அடுத்தடுத்த வருடங்களை நோக்கி செல்ல உங்கள் ஒத்துழைப்பு எப்போதும் எமக்கு வேண்டும் என்பதை முன்னிறுத்தி இவ்வமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்றுவரை உங்கள் உதவியாலும் இறைவனின் பேரருளாலும் புத்தளம் நகரின் கல்வி சார் உதவிகள், மருத்துவம் சார் உதவிகள், ஏனைய சமூகம் சார் உதவிகள் என இயலுமான நலத்திட்டங்களை செய்துள்ளது, செய்து கொண்டிருக்கின்றது என்பதை ஞாபகத்திற்காக உங்கள் முன் வைக்கின்றோம்.
புத்தளத்தினை முன்னிறுத்தி எமது பணிகள் அமைந்தாலும் அதனுடன் சேர்ந்தாற்போல் கத்தாரிலும் இயலுமான சேவைகள் செய்ய தவறவில்லை.
எமது சகோதரர்கள் இங்கு வழங்கும் சிறு சதகாவே நம்மூரில் மிகப்பெரிய பயன்பாடுகளாக மாறியிருக்கிறது, மாறுகிறது. மாற்றமாக பயனாளிகளிடமிருந்து மிகப்பெரிய முதலீடு எம்மவர்களுக்கு கிடைக்கிறது.
இருகரம் ஏந்தி இம்மை, மறுமைக்கான செய்யும் அவர்களின் துஆவை மிஞ்சி
எது இருந்துவிட போகிறது.
உங்களது சீரான பங்களிப்பால் ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்யும் Puttalam Association Qatar – PAQ தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதி(வெள்ளிக்கிழமை) கத்தார் பீனிக்ஸ் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடாத்தவிருக்கிறது.
இத்தறுவாயில் இதன் அடித்தளமாய் திகழும் உங்கள் அனைவரையும் உவகையுடன் வரவேற்கின்றோம். இவ்வருடாந்த பொதுகூட்டத்திற்கு வருகை தந்து இந்நிகழ்வை வெற்றிகரமான நிகழ்வாக மாற்ற வேண்டும். உங்கள் அமைப்பின் சேவையை தட்டிக்கொடுக்க வேண்டும். அதேநேரம் குறைகளை சுட்டிக் காட்டி அதனை நிறைகளாக மாற்ற உதவி செய்யவேண்டும்.
பழைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை ஒன்று உருவாகவிருக்கும் நிலையில் இவ்வமைப்பின் சொத்தான நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
Puttalam Association Qatar – ஆறு ஆண்டுகள் – நீண்டப்பயணம் – சமூக வளர்ச்சி...
ஆறாவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த, கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு .
Reviewed by nafees
on
18:37
Rating:
Reviewed by nafees
on
18:37
Rating:
No comments: