காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம். மூவர் காயம்.

கொஸ்கொடவில் காரில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அத்துருவெல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார், காயமடைந்தவர்களில் கொலைக்குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள சமன் பெரேரா என்ற நபரும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நபருக்கும் பாதள உலக புள்ளி கொஸ்கொட சுஜீ என்பவரிற்கும் இடையில் போட்டி காரணமாக துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம். மூவர் காயம்.
Reviewed by nafees
on
00:09
Rating:
Reviewed by nafees
on
00:09
Rating:
No comments: