மாகாண சபை தேர்தல் விகிதாசார முறையிலேயே நடத்த கோரிக்கை ..

மாகாண சபை தேர்தல்களை முன்னர் இருந்த விகிதாசார முறையில் நடத்த ஐக்கிய தேசிய
முன்ணனி தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இன்று அலரிமாளிகையில் தமிழ் முற்போக்கு முன்னனி தலைவர் மனோ , மு கா மற்றும் அ இ ம காங்கிரஸ் தலைவர்கள் ஹக்கீம் மற்றும் ரிஷாத் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இவ்விடயம் வழியுருத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில் இடம்பெற்றமையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை புதிய முறையில் மாகாண தேர்தலுக்கு செல்லக்கூடாது என வழியுருத்தப்பட்டுள்ளது.
திருத்தங்களுடன் புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் இங்கு வழியுருத்தியுள்ள போதும் அதற்கு பெரும்பாலான கட்சி தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மாகாண சபை தேர்தல் விகிதாசார முறையிலேயே நடத்த கோரிக்கை ..
Reviewed by nafees
on
14:55
Rating:
No comments: