எம் அனைவரினதும் புதுவருட எதிர்பார்ப்பு, பாராளுமன்ற தேர்தலொன்றே...

பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில்
உள்ள ஒரே நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கால்ட்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ :
இந்த வருடம் எமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தற்பொழுது தென்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தின் பிளவு, ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் உருவாகியுள்ளமை போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன.
இந்த வருடம் தேர்தல்கள் உள்ள ஒரு வருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது, மாகாண சபை தேர்தல் நடக்கவுள்ளது, அதுவும் பிற்போடப்படுமோ தெரியாது, அதேவேளை பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, என்றாலும், இந்த அரசாங்கத்திற்கு பலம் இருக்குமென்றால், அரசாங்கம் மக்களுக்கு முகம் கொடுக்க பயம் இல்லையென்றால், உடனடியாக இந்த அரசாங்கத்தைக் கலைத்து, பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு போகவேண்டும் என்பதே எம்மனைவரினதும் புதுவருட எதிர்பார்ப்பாகக் காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
எம் அனைவரினதும் புதுவருட எதிர்பார்ப்பு, பாராளுமன்ற தேர்தலொன்றே...
Reviewed by nafees
on
08:39
Rating:
Reviewed by nafees
on
08:39
Rating:
No comments: