ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாம். சந்தர்ப்பம் வழங்கி உள்ளதாக அறிவிப்பு.


பிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பொதுமக்கள் தமது
வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என ஜனாதிபதி ஊக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தி்ல் புத்தாண்டை வரவேற்கும் சம்பிரதாய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது ,  ஜனாதிபதிக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , நாளை பிறக்கவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் தமது சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாம். சந்தர்ப்பம் வழங்கி உள்ளதாக அறிவிப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பொதுமக்கள்  வாழ்த்து தெரிவிக்கலாம். சந்தர்ப்பம் வழங்கி உள்ளதாக அறிவிப்பு. Reviewed by nafees on 03:01 Rating: 5

1 comment:

Powered by Blogger.