கஞ்சா கோப்பிக்காக பயன்படுத்தும் கஞ்சா தூள்களுடன் பெண் கைது. #தாயிப் நகர், சுனாமி வீட்டுத் திட்ட முகவரியைச் சேர்ந்தவர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் கஞ்சா கோபிக்காக
பயன்படுத்தும் கஞ்சா தூள்களை வைத்திருந்ததன் குற்றச்சாட்டின் பேரில் இன்று(19) காலை 10.30 மணியளவில் குடும்பப் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் சுனாமி வீட்டுத் திட்டம்,தாயிப் நகர், நடுஊற்று கிண்ணியா எனும் முகவரியைச் சேர்ந்த வயது(34)உடைய இரு பிள்ளைகளின் தாய் குடும்பப் பெண் எனவும் தெரியவருகிறது.
இவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா கோபிக்கான இடித்து தூளாக்கப்பட்ட கஞ்சா தூள் கைப்பற்றப்பட்டதாக பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த பெண் கஞ்சா தூளை கோபி தயாரித்து விற்பனையில் ஈடுபடுவதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் நபரையும் கஞ்சா தூளையும் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ புத்திவர்தன தெரிவித்தார்.திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வரூவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கஞ்சா கோப்பிக்காக பயன்படுத்தும் கஞ்சா தூள்களுடன் பெண் கைது. #தாயிப் நகர், சுனாமி வீட்டுத் திட்ட முகவரியைச் சேர்ந்தவர்.
Reviewed by nafees
on
07:16
Rating:
Reviewed by nafees
on
07:16
Rating:
No comments: