சார்ஜாவில் இலங்கை பெண் ஓடும் காரில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரே தொழில் தருணரிடம் பணியாற்றி வந்த இலங்கை பெண்
ஒருவர் சார்ஜாவில் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைதாகியுள்ளார்.
கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த அவர், அதில் இருந்து குதித்ததாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காரின் சாரதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே அவர் அதில் இருந்து குதித்துள்ளார்.
இதுதொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் காவற்துறையினர், அவரது தொழில்தருணர்கள் துபாய் திரும்பும் வரையில் காத்திருப்பதாகவும், அவர்கள் வந்தப்பின்னரே இது தற்கொலை முயற்சியா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சார்ஜாவில் இலங்கை பெண் ஓடும் காரில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.
Reviewed by nafees
on
04:25
Rating:
Reviewed by nafees
on
04:25
Rating:
No comments: