மத்திய பிராந்திய தமிழ் மொழிமூல ஊடகவியலாளர்களுக்கான ஒரு வருட கால பகுதி நேர இலவச பயிற்சி நெறி.

மத்திய பிராந்திய தமிழ் மொழிமூல ஊடகவியலாளர்களுக்கான ஒரு வருட கால பகுதி நேர இலவச
பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து மத்திய பிராந்திய நிவ்ஸ்வீவ் பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மத்திய பிராந்திய தமிழ் மொழிமூல ஊடகவியலாளர்களுக்கான ஒரு வருட கால பகுதி நேர இலவச பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்படுகின்ற 20 பேருக்கு பின்வரும் துறைகளில், இலங்கையில் முன்னணி துறைசார் நிபுணர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
புலனாய்வு ஊடகவியல் (Investigative Journalism), தரவுகள்சார் ஊடகவியல் (Data Journalism), ஊடகவியலாளர்களுக்கான தொழிநுட்பவியல் (Use of Technology in Journalism), சமூக ஊடகம் (Social Media), மற்றும் கட்டுரைகள், செய்திகளை ஒழுங்கமைத்தல் போன்ற பல பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ஆர்வமுடையோர் மத்திய மாகாணத்தை வதிவிடமாகக் கொண்டிருப்பதற்கான சான்றுகள், ஊடகவியலாளர், சமூக ஊடக செயற்பாட்டாளர் என்பதற்கான அத்தாட்சிகள், கல்வி மற்றும் தொழில் தகைமைகள் அடங்கிய சுய விபரக் கோவை, ஆவணங்களடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 2018.04.28 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
The Director
EMEX Associates
190/2/1, Market Complex, Matale Road,
Akurana (20850), Kandy.
Email: editor.nv@gmail.com
ஆண், பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலம் பயிற்சி நெறிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
மத்திய பிராந்திய தமிழ் மொழிமூல ஊடகவியலாளர்களுக்கான ஒரு வருட கால பகுதி நேர இலவச பயிற்சி நெறி.
Reviewed by nafees
on
01:42
Rating:
Reviewed by nafees
on
01:42
Rating:
No comments: