புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னேக்கி இட்டுச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு



புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னேக்கி இட்டுச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட பிரதேசத்தில் மத்திய தர வர்க்கத்திற்காக நிர்மாணிக்கப்படும் லேக்வீவ் ரெசிடென்சீஸ் என்ற வீடமைப்பு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார். 

இன்று நடைபெற்ற இந்தவைபவத்தில் புதிய வேலைத்திட்டம் குறித்து மேலும் தெரிவிக்கையில் இத்தகைய வேலைத்திட்டம் பற்றி ஜனாதிபதியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்களான அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பிரகாரம் வேலைத்திட்டத்தை துரிதமாக அமுலாக்கப் போவதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் அவற்றின் பெறுபேறுகளை மக்கள் காணக்கூடியதாக இருக்கும். கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இத்தகைய குடும்பங்களை அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிகளில் குடியமர்த்தி, அடுத்த பத்து வருடங்களுக்குள் குடியிருப்பு பிரச்சினைகளை முற்றுமுழுதாக தீர்க்கப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிகரமசிங்க மேலும் தெரிவித்தூர்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னேக்கி இட்டுச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு  புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னேக்கி இட்டுச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு Reviewed by nafees on 12:04 Rating: 5

No comments:

Powered by Blogger.