தாய் எயிட்சினால் பாதிக்கப்பட்டதால் அநீதி இழைக்கப்பட்ட மாணவிக்கு இறுதியில் நல்லதொரு நீதி கிடைத்தது.

கனேமுல்லயில் எயிட்ஸ் தொற்றிற்கு ஆளாகியுள்ளார் என்ற பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வேறு இடத்தில் உள்ள தேசிய பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
எயிட்சினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற பொய்யான பிரச்சாரத்தினால் பாதி;க்கப்பட்ட மாணவியின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு தற்போது புதிய பாடசாலை கிடைத்துள்ளது மாணவியின் தந்தைக்கும் புதிய தொழில் கிடைத்துள்ளது என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் கல்வியமைச்சரே இந்த நடவடிக்கைகளை எடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
தனது தாய் எயிட்சினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தான் அவமானப்படுத்தப்படுவதாக 10 சிறுமி கடந்த மாதம் ஜனாதிபதியிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது பாடசாலை அதிபர் பாரபட்சம் காட்டுகின்றார் எனவும் குறிப்பிட்ட மாணவி தெரிவித்திருந்தார்.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவும் இந்த விடயத்தில் தலையிட்டிருந்தது.
தாய் எயிட்சினால் பாதிக்கப்பட்டதால் அநீதி இழைக்கப்பட்ட மாணவிக்கு இறுதியில் நல்லதொரு நீதி கிடைத்தது.
Reviewed by nafees
on
03:49
Rating:
Reviewed by nafees
on
03:49
Rating:
No comments: