உறுப்பினர் ரிஹானா தமிழ் மொழிபெயர்ப்பு கேட்டதால், காலி மாநகர சபை கன்னியமர்வில் அமளிதுமளி .
சிங்கள மொழியைப் புரிந்துகொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தினால் காலி மாநகர சபையின்
கன்னியமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதோடு முதலாவது அமர்வை ஒத்திவைக்கவும் நேரிட்டுள்ளது.
காலி மாநகர சபையின் கன்னியமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 அளவில் மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் ஆரம்பமாகியது.முதலாவது அமர்வின் மங்கள நிகழ்வில் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இடம்பெற்றதால் அதனை தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எம்.எவ். ரிஹானா, தமிழ் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது என்று கோரிக்கை விடுத்தார்.
இதன் காரணமாக சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டதோடு அமைதியின்மையும் தோன்றியது.மாநகர சபை உறுப்பினர் ரிஹானாவின் கோரிக்கையை நியாயப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான பி.எல்.தேசப்பிரிய, உடனடியாக மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்தார்.
குழப்பத்திற்கு மத்தியில் இவரது உரை காரணமாக சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.பெரும் அமைதியின்மைக்கு மத்தியில் கருத்து மோதல்களும் சபையில் எழுந்த காரணத்தினால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மாநகர மேயர் அறிவித்தார்.எனினும் 30 நிமிடங்கள் ஆகிய போதிலும் சபையை மீண்டும் கூட்டுவதற்கு முடியாத நிலைமை உருவாகியதாக அங்கியிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார் .
- சமகளம் -
உறுப்பினர் ரிஹானா தமிழ் மொழிபெயர்ப்பு கேட்டதால், காலி மாநகர சபை கன்னியமர்வில் அமளிதுமளி .
Reviewed by nafees
on
03:03
Rating:
அதை அடுத்த கூட்டத்தில் சொல்லி இருந்தால் என்ன ஆரம்பமே ஒரு முஸ்லிம் உறுப்பினரால் குழப்பம் வந்தது என்று வரலாறு படைக்க வேண்டுமா?
ReplyDelete