ஸ்ரீ லங்கன் விமான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் ஏன் லேட் ??

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானப் போக்குவரத்துக்கள் தொடர்ந்து காலதாமதமாவதாக
தெரிவிக்கப்படும் அறிக்கைகள் தொடர்பில், ஆராய்ந்து பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானசேவைகள் காலதாமதமாவதற்கான காரணம் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளுக்கு அமைய, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 900 தடவைகள் குறித்த நிறுவன சேவைகள் காலதாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், 280 தடவைகள் 1 மணித்தியாலயத்தக்கு அதிகம் தாமதமாகியுள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 840 தடவைகள் தாமதமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஸ்ரீ லங்கன் விமான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் ஏன் லேட் ??
Reviewed by nafees
on
22:37
Rating:
Reviewed by nafees
on
22:37
Rating:
No comments: